பாலா வீட்டை விட்டு வெளிய வந்தான் ..

மகதி நான் போய்ட்டு வரேன்..
நீங்க போகக் கூடாது..
ஏன்
ஏன்னா ஏன்.. அது அது உங்க ஊர்ல மழையாம்.. அத்தை உங்கள லேட்டா வர சொன்னாங்க..
" நிஜமா "என்று நம்பாத மாறி கேட்கவும்
' மரமண்டை.. ' " ஆமாம்.. வேணும்னா அத்தைகிட்ட கேளுங்க "
அவன் போனை எடுக்கவும்..' ஐயோ அவர போன் பேசாம பண்ணுடி '
" அதானே என்னையெல்லாம் எங்க நம்ப போறீங்க.. நல்லா செக் பண்ணுங்க" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்..
"மகதி"
" பேசாதீங்க "
" மகதி "
' இப்படியே கண்டினுயூ பண்ணுடி .. நம்பற மாறி தான் தெரியுது ' " சரி சரி.. உள்ள போலாம் வாங்க " என்று உள்ளே செல்ல போனாள்..
" மகதி " அவன் உணர்ச்சியற்ற குரலில் கூறவும் " இப்ப என்ன போகனுமா?..போங்க.. டைம் ஆயிடப் போகுது " என்றாள் கோபமாக..
அவன் பேசாமல் அமைதியாக இருக்கவும் " ம் ம் சொல்லுங்க " என்றாள்..
" ஓய்..இங்கப் பாரு.. நீ இங்க இருனு சொன்னா இருக்கப் போறேன்.. அதுக்கு எதுக்கு இந்த பொய் கோபமெல்லாம் " என்று சிரித்துக் கொண்டே கூறினான்..
' மகதி இப்பவும் மொக்கை வாங்கிட்டியே.. இது என்னை மொகறக்கட்டையோ ஒரு எக்ஸ்பிரசனும் புரிய மாட்டிங்குது.. சரி சரி எப்பவும் போல சிரிச்சே சமாளிப்போம்.. ' என்று நினைத்துக் கொண்டு
" சாரி " என்றாள்..
" உன்னையெலாம் வாய் இல்லைனா நாய் கூட மதிக்காது .. உள்ள போ "
நீங்களும் வாங்க..
இல்லடா.. நான் நாளைக்கு மார்னிங்கே அங்க இருக்கனும் .. இன்னும் ஒன் மன்த் தான மேரேஜ்கு இருக்கு அப்போ பேசிக்கலாம்
அவன் அவ்வாறு சொல்லவும் மகதியின் முகம் வாடியது..
" சரி பார்த்துப் போங்க.. " என்றாள் சோகமாக
YOU ARE READING
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
General FictionHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..