அர்ஜூனைப் பற்றி கேட்டவுடன் " அர்ஜூன நான் தான் டவுனுக்கு பரம்பரை நகையெல்லாத்தையும் பாலிஸ் பண்ணி வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்..நைட்குள்ள வந்திடுவான் பா.. " என்றார் பரு...
" என்னாச்சு கிருஷ் ஏன் வந்ததிலிருந்து ஒரு மாறியா இருக்க "என்று தயக்கத்துடன் பாலா அவனின் தோள் மீது கைவைத்துக் கேட்டான்..
யாருக்கும் தெரியாமல் அவனது கையை மெதுவாக தட்டிவிட்டு " நான் நல்லாத்தான் இருக்கேன் டாக்டர் சார் " என்றான் பொய்யான சிரிப்போடு..பாலாவுக்கு கிருஷ் தனது கையை விட்டு போய்விடுவானோ என்ற பயம் ஏற்பட்டது.. கிருஷ் தனது கண்களை நேராக கூட பார்த்து பேச மாட்டேன் என்கிறானே ஒருவேளை எது அவனுக்கு தெரியக் கூடாது என்று இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மை அவனுக்குத் தெரிந்து விட்டதோ ... அவனையே அறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது..

அத்தை அர்ஜூன் இங்க எத்தனை வருசமா தங்கியிருக்காரு - கிருஷ்..
" என்ன கிருஷ் எங்கள எல்லாம் கேட்காம வந்ததிலிருந்தே அர்ஜூனப் பத்தியே கேட்டுட்டே இருக்க " என்றார் மாணிக்கம்..
கிருஷ் எதுவும் பேசாமல் இருக்கவும் " அதில்லப்பா சேம் ஏஜ்ஜா இருந்தா ஜாலிய பேசிட்டு இருக்கலாம்ல.. அதுக்குதான கிருஷ் " என்று சமாளித்தாள்..மகதி..
" நீங்க சொல்லுங்க அத்தை " என்றான் விடாப்பிடியாக..

பருவும் எதனைப்பற்றியும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தார்.. " ரெண்டு வருசமா இங்க தான் இருக்கான்.. எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வான்.. மகதி இல்லைனா கூட நாங்க இருந்துக்குவோம்.. அவன் இல்லைனா தான் எனக்கும் அவருக்கும் கையும் காலும் ஓடாது.. " என்று அடுக்கிக் கொண்டே போனார்
அவர் பேச பேச கிருஷின் முகம் மாறிக் கொண்டே சென்றது..
பாலா இதற்கு மேல் பொறுக்க முடியாமல் " கிருஷ் வா வெளிய போய்ட்டு வரலாம்.." என்று அழைத்தான்..
![](https://img.wattpad.com/cover/111627227-288-k466495.jpg)
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..