அவர் கொஞ்சம் தயங்கவும்.. " பயப்படாதிங்க மாமா என்னை நீங்க குறை சொல்ற மாறி ஒரு போதும் நடந்துக்க மாட்டேன்.. " எதோ யோசித்தவனாக " ஜானகியம்மா உங்களுக்கு டைம் ஆச்சுனு சொன்னிங்கள்ள.. அர்ஜூன் அவர போய் வாசல் வரை விட்டுட்டு வா " என்றான் பாலா..
ஜானகியும் இவனை முறைத்துக் கொண்டு " சரியண்ணா நான் கிளம்பறேன்.. எதாவது உதவி வேணுனா கேளுங்க ..வரேன் அண்ணி " என்று சொல்லி கிளம்பிவிட்டார்..அவர் செல்லும் போது அர்ஜூனை பார்த்து ஜாடையில் எதோ சொல்லிச் சென்றார்..
" சரிப்பா நீ போய் மகதிய பாரு. . பருவதம் அவருக்கு மகதியோட அறைய காட்டு.. எனக்கு முக்கியமான வேலையிருக்கு.. அதை முடிச்சிட்டு வந்தி்டறேன் .. அப்படியே தம்பிக்கு சாப்பிட எதாவது கொடும்மா " என்ற மாணிக்கம் செல்லும் போது அர்ஜுனையும் உடன் அழைத்து சென்றார்..
தன்னை முறைத்துக் கொண்டிருந்த பருவதத்தை பார்த்து " அத்தை உங்களுக்கு என்னை பிடிக்கல தான " என்றான்..
அவர் இல்லை ஆமென்று மாத்தி மாத்தி தலையாட்டுவதை பார்த்து சிரித்தவன் " உங்க தம்பி பையனுக்குதான் மகதிய கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசப்பட்டு இருப்பிங்க.. நான் வந்து உங்க ஆசய கெடுத்துடேன்ல.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்லுங்க.. நான் போயிடறேன் " என்றான் பெருந்தன்மையாக..
" அப்படியெலாம் இல்லப்பா.. அன்னைக்கு ஊர்க்காரங்க முன்னாடி கொஞ்சம் சங்கடமா போச்சுப்பா.. அதான்.. ஆனால் உண்மையிலே உன்ன மாறி ஒரு நல்ல பையன் எங்க தேடியும் கிடைக்க மாட்டங்கப்பா.. இதோ மகதியோட ரூம்.. நீங்க பேசிட்டு இருங்க.. உங்களுக்கு சாப்பிட எதாவது கொண்டு வருகிறேன் " என்றவாறு கிளம்பிவிட்டார்..
பாலா மெதுவாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்..மகதி தன்னிலை மறந்து அழுது கொண்டிருந்தாள்..
" மகதி " என அவனழைக்கவும்.. வெடுக்கென எழுந்து அமர்ந்தவள் இது கனவா நிஜமா
Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.