பாகம் 52

5.2K 166 112
                                    

ரத்தினவேல் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்..கம்பீரமாக வீர நடைபோடும் தன் மனைவியை இப்படி உயிரற்ற ஜடம் போல படுத்திருப்பதை பார்க்க  முடியாமல் துடிதுடித்துப் போனார்..

இந்திராவிற்கு சுஜி தெரிவித்திருக்க, அவரும் ஜோசப்புடன் வந்து சேர்ந்தார்..
ஏற்கனவே அக்காவின் உடல் நலம் குறித்து கவலையுடன் வந்த இந்திராவிற்கு வெளியூருக்குச் செல்வதாக கூறிச்  சென்ற தனது இளைய மகன் அழுதழுது சோர்ந்து போய் சுஜியின் தோளில் சாய்ந்திருப்பதைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.. பாலாவின் நிச்சயத்தன்று கூட ஜானகியுடன் யாரும் பேசவில்லை.. அவ்வாறு இருக்க இவனது உடனடி வருகையும் தொடர் அழுகையும் மனதை உறுத்த தயங்கியவாரே அவன் அருகில் வந்து சேர்ந்தார்..

" சுஜி எங்கம்மாவ காப்பாத்திடலாம்ல.. அவங்க எழுந்து எங்கோட பேசுவாங்க தான.. இனிமே நான் அவங்கள ஹர்ட் பண்ற மாறி நடந்துக்க மாட்டேன்.. எப்பவும் அவங்களோடயே இருப்பேன்.. நீ போய் அவங்கள கூட்டிட்டு வா சுஜி.. எங்கம்மா எனக்கு வேணும் சுஜி.. " என்று புலம்ப ஆரம்பித்தான்..கிருஷ்

" கிருஷ் தைரியமா இரு.. அவுங்க உனக்காகவாது கண்டிப்பா வருவாங்க
.. அவுங்க உசிரே நீதான்டா உன்னை விட்டு எப்படிப் போவாங்க " என்று அவளும் ஆறுதல் சொல்ல அதைக் கேட்ட இந்திராவிற்கோ தலையில் இடி விழிந்தது போல இருந்தது..லேசாக தலைசுற்ற ஆரம்பிக்க அதை சமாளித்தவாரே இருக்கையில் சுஜிக்கு அருகே அமர்ந்தார்.

" அத்தை " என அதிர்ந்து கூற அவரைக் கண்ட கிருஷ் அவரைக்  கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.. " அம்மா.. எனக்கு பயமா இருக்குமா" என அழ ஆரம்பித்தான்..

" கிருஷ்..இங்கப்பாரு.. எங்க அக்காவுக்கு ஒன்னும் ஆகாது " என்று அவர் சொல்லும்போது தான் சுயநினைவை அடைந்தான் கிருஷ்..

இந்திரா அவனை அர்த்தமாகப் பார்க்க அந்த வலியுடன் இந்த வலியும் சேர்ந்து கொண்டது..  கொஞ்சநஞ்சம் இருந்த தைரியமும் காற்றில் பறந்து போக.. அவரது மடியில் விழுந்து கதற ஆரம்பித்தான்..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin