இங்க என்ன காமெடி ஸோவா நடக்குது.. என கோவமாக பாலாவின் அருகில் சென்று கேட்டாள்..
பாலா கூலாக தன் கூலிங்கிளாசை கழட்டி விட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான்
இதுவரை இருமுறை பாலாவைப் பார்த்து இருந்தாலும் இருவர் பார்வையும் ஒன்றாக சந்திக்க வில்லை என்பதே உண்மை..
அவனது அந்த கூரிய பார்வையும் குழந்தை சிரிப்பும் அவளை ஏதோ செய்தது..அவன் விழி வீச்சில் சிக்கிக் கொண்டாள்..
லொடலொட என வாய் பேசிக் கொண்டே இருக்கும் வாயாடி பேசா மடந்தை ஆகிப் போனாள்.." அடியேய் பாலா சார் போயி அஞ்சு நிமிசம் ஆச்சு.." என்ற தோழியின் அதட்டலில் சுய நினைவுக்கு வந்தாள்..
என்னடி ஆச்சு..
ஹான் ஒண்ணுமில்ல.. டைம் ஆச்சு போய்ட்டு வரேன்..என்று தோழியிடம் பொய் சொல்லித் தப்பித்தாலும் அவளது மனம் மாட்டிக் கொண்டது என்பது உண்மையே..
' மகதி நீ சரியில்லை.. வந்த வேலய மட்டும் பார்த்துட்டு ஒழுங்கா ஊர் போய் சேறு.' என உள்மனம் எச்சரித்ததின் படி மனதை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு வெளியேறினாள்..
அந்த ஒரு நிலைக்கு ஆயுள் ரொம்ப குறைவு போல..வாசலில் ஒரு அம்மா பாலாவின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தாள்..'நீங்க என் அம்மா மாறி.. ப்ளிஸ் எழுந்திருங்க..' என்றான் பாலா ..
' நீங்க தான் என் புருசன் உசிரையே காப்பாத்தினிங்க..என் உயிர் இருக்கற வரை உங்கள மறக்க மாட்டேன் தம்பி ' என தன் நன்றி உணர்வைக் காட்டிக்
கொண்டு இருந்தார்..அம்மா இது என்னோட வேலைம்மா..இதுக்கெலாம் நன்றி சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல..
ESTÁS LEYENDO
உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
Ficción GeneralHighest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..