💜MTM-31💜

2.2K 84 8
                                    

வர்ஷிக்கு கால் வருது...

இதென்ன புது நம்பரா வருதே...

"ஹலோ"

"வர்ஷிமா"

"அத்தம்மா??? நல்லாயிருக்கீங்களா???"

"நல்லயிருக்கேண்டா.... இன்னைக்கு கிளாஸ் போக வேணாம். நாங்க வர்றோம்"

"என்னாச்சு அத்தம்மா???"

"நாங்க வரலாம்ல????"

"வாங்க அத்தம்மா.... நா வெயிட் பண்றேன்..."

கால் கட் பண்ணிட்டு வர்ஷி யோசிச்சிட்டு இருக்கா. ஒரு வேளை இனியனும் வருவானோ??? வந்தா என்ன??? நான் அவன்கூட பேசமாட்டேன்... அவனுக்கு என்னா அவ்ளோ திமிறு...???

ரொம்ப பண்றான். அவன் தான் என்ன கை நீட்டி அடிச்சான்.. நா என்ன சொல்ல வரேன்'னு கூட கேட்கல... அப்பறம் இவ்ளோ நாளா ஒரு கால் கூட பண்ணல. Daily'um watsapp பார்க்க முடியுது... FB பார்க்க முடியுது... ஆனா பேச மட்டும் முடியல... சீன்னு... வரட்டும் அத்தையம்மா இருந்தாலும் அவனோட நா பேச மாட்டேன்... இப்போ ஏன் இவங்க வராங்க... நாம அம்மாகிட்ட சொல்லலாம்.'னு அம்மா'கிட்ட பேசிட்டு ஷாலுகிட்ட போறா....

"ஷாலு... அத்தம்மா வராங்கடா"

"அப்படியா??? என்னடி விசியம்???"

"தெரிலடா... வந்தாதான் தெரியும்... பார்க்கலாம்"

"இனியன்???"

"தெரிலடா... வந்தாலும் நா பேசரதா இல்ல..."

"ஹேய்... பேசுடா அவர் தான் உன் life. அப்படி தானே?? இல்ல மாற்றம் இருக்கா?? இனியன் வேணாமா உனக்கு????"

"ச்சே.... அதெல்லாம் இல்ல டா. என் life இனியன் கூட மட்டும் தான்... ஆனா அவனுக்கு என்ன இவளோ கொழுப்பு...அதான் கொஞ்சம் கோவம்... அவனா வரட்டும்... பார்க்கலாம்..."

"ம்ம்ம்ம்... நீ கவல படாதடா... உன் life கண்டிப்பா நல்லா இருக்கும்."

"ம்ம்ம்... thanks da....அப்பறம் அம்மா last time வந்தப்போ கூட கேட்டாங்க..?? பெரி மஹீ'க்கு கல்யாணம் பண்ணனும்'னு பிடிவாதம் பண்றாங்களாம்.. மஹீ வேணாம் சொல்லி அடம் பிடிக்கறானாம். பெரி அம்மா'ட கேட்டாங்களாம். எதும் லவ் இருக்குமோ'னு வர்ஷி பாப்பா'டா கேட்கனும். 

மனமே மெல்ல திறWhere stories live. Discover now