💜MTM-37💜

2.2K 76 5
                                    


"நீ போ மா... நா கூட்டிட்டு வரேன்....." ஷாலு இனியனையே திரும்பி திரும்பி பார்த்துட்டே போறா.... அவ்ளோ நம்பிக்கை போல... இவன் என்ன செய்ய போறானோ'னு?????? ஷாலு நீ நினைக்கறது போல எனக்கும் பயம் தான்...

அந்த மங்கம்மா எப்படி பாய போறாளோ?????? கடவுளே காபாத்துங்க.... வேண்டிகிட்டு வர்ஷி ரூம்க்கு போறான்... அப்போ வர்ஷி நீட்டா உட்கார்ந்து FB பார்த்துட்டு இருக்கா... இனியன் வர்றத உணர முடியுது..."இந்த எரும இப்போ ஏன் இங்க வர்து??? அதும் காலையிலே??"நினைச்சிட்டு, ஆனா கொஞ்சம் கூட கண்டுக்கல. இனியன் வந்து அவ பக்கத்தில உட்கார்ந்து,

"கோவம் போச்சா????"

".........."

"ப்பா... தேங்க்ஸ்டா கடவுளே... நான் கூட உன்மேல கோவ பட எனக்கு என்ன உரிமை இருக்கு???னு கேட்டுவியோ'னு பயந்துட்டேன்"

"........."

"பேசமாட்டியா???"

"ஏன் இப்போ வீனா சீன் கிரியேட் பண்றீங்க????"

"சரி ஏன் ஷாலுவை திட்டுன????"

"அவ என் friend... அவளை திட்டுவேன்... கொஞ்சுவேன்... ஏன் அதுக்கும் உன்கிட்ட permission வாங்கனுமா????????"னு கத்தறா வ்ர்ஷி.

அய்யோ கோவ பட்றாளே....??? சரி சமாளிப்போம்...

"அவ என் தங்கச்சி.."

"ஓஓ.... அதான் தெரியுமே???? எல்லாம் ஒன்னா தானே இருக்கீங்க.."

"ஏய் லூசு மாதிரி பேசாத..."

"நா பேசல... நீ போ முதல... யார பார்த்தாலும் கடுப்பா ஆகுது..."

"என்ன மரியாதை குறையுது...?? நா நினைச்சா....??"

அவனை திரும்பி பார்க்கறா... ஏன் இப்படி பன்றான்??? கடவுளெ என்ன எங்க அப்பாகிட்டயே treatment எடுக்க வச்சிடுவன் போலயே...அவளையே பார்த்த இனியனுக்கும் என்ன தோனுச்சோ.... டக்'னு அவ முகத்தை கைல ஏந்தி "pls டா வர்ஷி... கோவ படாத..." வ்ர்ஷி அவன் கண்னை பாத்துட்டு இருக்கா... கண்கள் பேசுது... மௌனம் வேடிக்கை பார்க்குது....

இப்படியே நிமிடங்கள் கடக்குது... இனியனே வெளி வர்றான்...

"சொல்லு வர்ஷி... உனக்கு பிடிக்காததை யாராவது செஞ்சாங்களா????"

"..............."

"சொல்லு என்னை பிடிக்கலயா?????"

"இதயே எத்தனை முறை கேட்பீங்க"

"அப்பறம் என்ன பிரட்சனை???"

"உங்களுக்கு என்ன தெரியும்???"

"எனக்கு என்ன தெரியனும்??"

"......."

"சொல்லு..."

"இனி உங்களுக்கு தெரிஞ்சி என்ன ஆக போகுது???"

"எனக்கு தெரிஞ்சி தான் எல்லாம் நடக்குது... ஆனா நீ ஏன் புரிஞ்சிக்க மாட்றா???"

"என்ன????"

"எனக்கு எல்லாமே தெரியும் வர்ஷி"

"எல்லாமே'னா???"

"மதன் விஷ்யம்????"

"அப்பா"

"இல்ல ஷாலு"

"என்னது????"

"இரு உனக்கு எல்லாம் சொல்றேன்....."

எனக்கு தெரில... நா உன்ன தப்பா தான் நினைச்சேன்... அதுக்கு காரணம்.... வினோத். அவன் என்னோட ரொம்ப ரொம்ப குளோஸ் friend. அவன் லவ் பண்ணான். ஆனா அவனோட நல்லா சுத்திட்டு அவனையே பைதியமா ஆக்குனது ஒரு பொன்னு அதுவும் காதல்'னு சொல்லி. அவனுக்காக treatment கொடுக்க வந்தப்ப தான் பார்த்தேன்.. ஆனா அப்பவே நீ என் மனசுல பதிஞ்சிட்ட... ஆனா நீயும் லவ் பண்ரீயோ'னு தோணுச்சு... பொன்னுங்க மேலயே வெறுப்பு வந்துச்சு... ஆனாலும் நீ பக்கத்தில இருக்கனும்'னு தோணுச்சு..

ஒரு நாள் வினோத் அவனோட காதலியோட எடுத்த photo'la நீ இருந்த... ஆனா அப்போ வினோத். இந்த gang'எ இப்படி தாண்டா சொன்னான். ஆனா அப்போ கூட அவ அப்படி இல்ல'னு தோணுச்சு. கல்யாணத்திற்கு முன்னடி எப்படி இருந்தாலும் பரவாயில்ல ... அப்பறம் என்னவளா இருந்தா போதும்னு... அதும் நீ வேணாம்'னு சொன்னதும் வேற எதுவோ போல.... ஆனா எனக்கு உன்ன விட்டுதர மனசே இல்ல போல... அதான் உன்கிட்ட கேட்காமலே, நீ வேணாம்'னு சொல்லியும் வந்தேன்...

அப்பறம் வீனா குழப்பிக்க வேணாம்'னு தான் உன்கிட்ட கேட்டேன்.. நீ இது ஷாலு cousin... அவ்ளோ தான் சொன்ன... அப்போ உன்கண்ல ஒரு வித வெறுப்பு தெரிஞ்சிது... அதனால நானும் அதோட விட்டுடேன்... அப்பறம் அத பத்தி யோசிக்க கூட தோனல நீ சாருக்கிட்ட ரக்ஸிதா'வை பத்தி பேசற வரை... எனக்கு தெரிஞ்சி ரக்ஸிதா விரும்பினது வினோத்'தை... அதனால தான் நீ சொல்றத நம்ப முடியல.... சாரிடா... ஆனா நா பொறுமையா கேட்டு இருக்கனும்.....😎

மனமே மெல்ல திறWhere stories live. Discover now