💜MTM-35💜

2.2K 77 6
                                    


வர்ஷி சாரில தன்னை தானே ரசிச்சிட்டு இருக்கா. ச்சே... நீ ரொம்ப அழகு டா வர்ஷி'னு கொஞ்சிக்கறா.. அப்போ நேத்து நடந்தது ஞாபகத்தில வருது.கொஞ்சம் வெக்கமும் எட்டி பார்க்குது.... ம்மா.. இவ்ளோ நாள்ல நேத்து தான் சார்'க்கு உண்மைய பேசனும் தோணியிருக்கு... ஆனா ஆச்சிரியம் தான்... கொஞ்சம் கூட கெத்து காட்டலயே.... ஒருவேளை இனியன் மாறிட்டானோ...? இப்படியே கொஞ்ச்சிட்டு இருந்தா எப்படி இருக்கும்...?? வாழ்க்கை சிரிப்பா சிரிக்கும்.... மனசுகிட்ட பேசிட்டு இருந்த வர்ஷி வாய் விட்டே சிரிச்சிட்டா.... அப்போ மஹீ கால் பண்றான்...

"ஏய் வர்ஷி... கிளம்பிட்டீயா இல்லயா????"

"ம்ம்ம்ம்"

"வேகமா வாடா... ஷாலு வேற.... எவ்ளோ நேரமா வெயிட் பண்றது'னு கத்தறா...."

இவன் என்ன சொல்றான்??? ஷாலு ஏன் வெயிட் பண்றா... ஒரு வேளை நாம போயி ஷாலுவை pick பண்ணனுமா???? என்ன நடக்குது இங்க??? இவன் கிட்ட வாய் கொடுத்தா வாங்கிடலாம்... எப்படி ஆரம்பிக்கறது???? K try பண்ணி பார்ப்போம்... ஆனா வர்ஷி அவசரத்தில உளரி மாட்டிக்காத... யார்கிட்ட???? இப்போ வர்ஷி டர்ன்....

"........"

"ஹேய் அவதாற்குட்டி என்ன பண்ற????"

"ம்ம்ம்... ஏன் இப்போ வெயிட் பண்ண மாட்டாளாமா???"

"ஏய் இப்போ எதும் ஆரம்பிக்காத டி... சீக்கிரம் வா..."

"என்ன ஆரம்பிச்சாங்க இப்போ???"

"என் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதடா..."

"ஏன் சாரு'க்கு என்னாச்சு???"

"ம்ம்ம்ம்.... அத ஏன் கேட்கற??? ஏற்கனவே ஷாலு கத்திட்டு இருக்கா??"

""அவளுக்கு என்னவாம்???""

"ஏய் படுத்தாதடி..."

"சொல்லுங்க மஹீ சார்"

"ஹேய் வர்ஷி... நிஜமாடா... அங்க ஷாலு கத்தற.... ஏண்டா ராகு காலத்தில வந்து நிச்சயம் பண்ண போறீங்களா'ன்னு???"

ஓஒ இதான் விசியமா..... இத தான் சஸ்பென்ஸ் ஆ???? ச்சே... பரவாயில்லை நாமலும் அதேபோல நடக்க வேண்டியது தான்... ஆனா ஏன் இப்பவே நிச்சியம் பண்றாங்க??? அதும் ஷாலுக்கு தெரியுமா???? ஆனா ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல???? என்னடா இது???

"ஹேய் வர்ஷி... கிளம்பிட்டியா?? சீக்கிரம் வாடா.. pls"

ஓ இவன் வேற"ஹேய் மஹீ...ராகு காலத்திலயா போக போற???"

"நீ வாடி முதல...."

அய்யோ கத்த ஆரம்பிச்சிட்டானே... சரி போகலாம்'னு வர்றா... எல்லாரும் ஷாலு வீட்டிற்கு போறாங்க.... வர்ஷி அமைதியா வர்றா.... மத்த எல்லாரும் பேசிட்டு வர்றாங்க... ஷாலு வீட்ல எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.... ஷாலு செம டென்ஷனா இருக்கா... அப்பறம் மஹீ வீட்ல இருந்து வந்ததும் தட்டு மாத்தி கல்யாணத்திற்கு நாளும் குறிச்சிட்றங்க... வர்ஷி'க்கு ஆச்சிரியமா இருக்கு... என்ன அதுக்குள்ளயும் நாள் குறிச்சிட்டாங்க... அப்போ படிப்பு??? என்ன ஷாலு'வும் அமைதியா இருக்கா????

அதுவரையும் அமைதியா இருந்த வர்ஷிக்கு அதுக்கு மேல முடியல.... ஷாலுகிட்டயே கேட்கறா.... அதுக்கு ஷாலு "மஹீ எடுத்த முடிவுடி.... எனக்கு நீ, மஹீ எல்லாரும் தான் முக்கியம்... நா மேல படிச்சத உனக்காக தான். இப்போ எல்லாரும் சொன்னாங்க... நானும் சரி சொல்லிட்டேன்... ஆனா மஹீ கல்யாணத்திற்கு அப்பறம் காலேஜ் போகலாம்'னு சொல்லியிருக்கார்.. இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு கோர்ஸ் முடிக்க..."

"சரிடி... ஆனா அதே தான் நாணும் கேட்கறேன்... இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு...."

"தெரில.... உன் அருமை அண்ணா'ட்ட கேளு....?"

"ரொம்ப தான்... இன்னைக்கு உனக்கு நிச்சயம்'னு எனக்கு சொல்லவே இல்ல??"

"என்ன உனக்கா??"

"ம்ம்ம்ம்ம்ம்?????"

"ஓஓஓ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு... தெரியும்"

"என்னடி????"

"அது உன்கிட்ட இனியன் அண்ணா எதும் சொல்லலயா???"

"ம்ம்ம்... ஆனா நானே கண்டு பிடிச்சிட்டேன்."

"அப்படியா??? எப்படி???"

"மஹீ சொன்னான்.... ஆனா உனக்கும் தெரியும்ல??? நீ ஏன் சொல்லல???"

"ஹேய்... நீ வேற... எனக்கே நேத்து வந்த அப்பறம் தான் தெரியும்"

பேசிட்டு இருக்கும் போது, சரஸ் வந்து "வர்ஷி நீ வா... கூப்பிட்றாங்க"

"நானா எதுக்கு????"😎


மனமே மெல்ல திறWhere stories live. Discover now