சாரிடா... ஆனா நா பொறுமையா கேட்டு இருக்கனும்..... எனக்கு தெரிஞ்சி ரக்ஸிதா விரும்பினது வினோத்'தை... நானும் பாத்து இருக்கேன் அதனால... நீ சும்மா வேணும்'னு சொல்ற... மஹீயை ஆரம்பத்தில சாரு வேணாம்'னு சொன்னதால சொல்ற'னு நினைச்சி தான் உன்கிட்ட கோவ பட்டேன். அதுவும் இல்லாம மதனை பத்தியும் தெரியும்'ற நம்பிக்கைல தான்.
ஆனா உன்னை பத்தி பேசலனாலும், உன்கிட்ட பேசலனாலும் நீ என்னோட ஒவ்வொரு நிமிஷத்திலயும் என்னோட ஞாபகத்திற்கு வந்த... நீ தான் தப்பு பண்ணி இருக்க... நீயா தான் என்கிட்ட பேச வரனும்....... சீக்கிரம் வாடி'னு எனக்கு நானே ஒவ்வொரு நிமிஷமும் சொல்லிக்குவேன்...
எனக்கு உன்னை பார்க்காம இருக்கவே முடில... அன்னைக்கு அம்மா வந்தப்போ கூட விபா உன்னை வீடியோ எடுத்து அனுப்புனான்... அன்னைக்கும் எனக்கு வர ஆசை தான்... ஆனா அம்மா முன்னாடி நீ கோவ பட்டா.... அம்மாகிட்ட எல்லாம் சொல்லனும்.... எனக்கே அப்போ நீ பண்றது தப்பு'னு தோணுனதால அவங்களும் உன்னை தப்பா நினைச்சிடுவாங்களே'னு தான் வரல...... ஆனா அன்னைக்கு எனக்கு செம கடுப்பு என்மேலயே....
சரியா சொல்லனும்'னா அம்மா வந்துட்டு போனதுக்கு மறுநாள் ஷாலு கால் பண்ணா.. எடுத்ததும் அவ சொன்னத அப்படியே நினைச்சி பார்க்கறான்..
"அண்ணா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் வர்ஷி பத்தி"
"என்னாச்சு மா"
"அண்ணா வர்ஷி இப்பொல்லாம் ரொம்ப மாறிட்டா... அவளுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்... ஆனா இப்போ என்னையும், மஹீயும் கூட கண்டுக்க மாட்றா... அவ எதோ ரோபோ போல இருக்கா... அதிகம் பேசறது இல்ல... சிரிக்கறது இல்ல... அடிக்கடி எதோ யோசிட்டு இருக்கா. எனக்கு தெரியாது உங்களுக்குள்ள என்ன பிரட்சனை'னு??? ஆனா அதில வர்ஷி மேல மட்டும் தப்பு இல்ல அண்ணா"
"ம்ம்ம்ம்..... மேல சொல்லுமா"
"மதன் சம்பந்தமா எதோ பிரட்சனை'னு தெரியும்... அது விஷ்யமா எனக்கு தெரிஞ்சத சொல்றேன்... ரக்ஸிதா என்னோட cousin... அவளுக்கு ஆண்டி ஓவரா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டாங்க.. அவளுக்கு கொஞ்சம் கூட கண்ரோல் இல்லாம எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துட்டு ரொம்ப பண்ணா.. அப்பறம் அங்கிள் கண்டிக்கும் போது கூட நா suside பண்ணிக்குவேன் சொல்லி மிரட்டுனா... ஒரே பொன்னு வேற... அதனாலயே அவளை ரொம்ப யாரும் கண்டிக்க முடில... அப்போ தான் ஒரு நாள் ஒரு பையனை கூட்டிட்டு வீட்ல வந்து இரண்டு பேரும் நல்லா ட்ரக்ஸ் எடுத்துட்டு போதைல என்ன பன்றோம், யாருகிட்ட பண்றோம்'னு தெரியாம இருந்தாங்க..."
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..