இனியன் கால் பண்ணுவானா?'னு எதிர்பார்ப்போட காத்திருக்கா வர்ஷி. ஆனா இனியன் மஹீ, விபா அனுப்பின வீடியோஸை பார்த்து அதிலயே வாழ ஆரம்பிச்சிட்டான். அவனுக்கு புரியலை தான் தப்பு பண்ரோம்'னு. வர்ஷியா தான் தன்கிட்ட பேசனும்'னு உறுதியா இருந்தான்.
மதன் சாரு'கிட்ட நார்மலா பேச ஆரம்பிச்சான். ஆனா வர்ஷி பேசினதையோ, ரக்ஸியையோ பத்தி எதும் பேசல, சாருவும் கேட்கல. மஹீ-ஷாலு இரண்டு பேரும் காலேஜ்'னு கூட பார்க்காம லவ்ஸ்ல தான் எந்நேரமும் இருக்காங்க.
சரஸ் வர்ஷிக்கு கால் பண்றாங்க.
"சொல்லுங்க மா..."
"என்னடா??? இன்னைக்கு நைட் வர்ரீங்க தானே????"
"ம்மா நா கண்டிப்பா வரணுமா????"
"ஆமாடா... சாரு உன் நாத்தனார் தானே...??? அதுமில்லாம அந்த பொண்ணு அத்தனை முறை கால் பண்ணி ஆண்டி வந்துடுங்க... கண்டிப்பா வர்ஷியையும் வர சொல்லுங்க. நா அவகிட்ட சொல்லிட்டேன் ஆனா நீங்க சொன்னாதான் கண்டிப்பா வர்வா'னு சொன்னா."
"......."
"ஷாலு'வையும் கூட்டிட்டு வா... அக்கா பார்க்கனும்'னு சொன்னாங்க. மஹீ கிட்ட சொல்லிட்டேன் அவனோட வாங்க."
"ம்ம்ம்ம்ம்ம்ம்"'னு சொல்லி கால் கட் பண்ணிட்டு ஷாலுவை பார்க்கறா.
"என்னடி??? நாம போறோமா???"
"ஆமாடா... அம்மா கண்டிப்பா வரனும்'னு சொல்லி இருக்காங்க"
"சரிடா... ஆனா மதன் விஷ்யம்????"
"நான் அவன் கிட்டயே நேரடியா கேட்க போறேன் டா"
"ஏண்டி???"
"இல்லடி... அன்னைக்கு நடந்தத யோசிச்சி பார்க்கும் போது அவன் சாரு மேல பாசமா இருக்க மாதிரி தான் தோனுது.. அப்பறம் அந்த ரக்ஸிக்கும் கல்யாணம் ஆச்சு... அதனால இவன் திருந்தினா நமக்கு போதும்ல???"
"ம்ம்ம்ம்... ஆனா இனியன் அண்ணாகிட்ட சொல்லிடலாம்'னு தோனுது..."
"விடுடா... அவனுக்கு அவ்ளோ சீனு இல்ல"
"சரிடி நா மஹீகிட்ட பேசிட்டு வரேன்" சொல்லி மஹீ கூட கடலை போட்டுகிட்டு இருக்கா. அதை பார்க்கும் போது இனியன் மேல கோவமா வருது.
YOU ARE READING
மனமே மெல்ல திற
FantasyHi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..