நான்..

18 3 3
                                    

நான் அன்பாய் இருக்கிறேன் என்பதால் அடிமையாய் இருக்கிறேன் என்று அர்த்தமில்லை...

நான் மௌனமாய் இருக்கிறேன் என்பதால் ஊமையாகி விட்டேன் என்று அர்த்தமில்லை...

நான் புன்னகையோடு இருக்கிறேன் என்பதால் சந்தோஷமாய் வாழ்கிறேன் என்று அர்த்தமில்லை...

சகிப்புத் தன்மையோடு இருக்கிறேன் என்பதால் கோவப்பட மாட்டேன் என்று அர்த்தமில்லை...

நான் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன் என்பதால் பின் வாங்குகிறேன் என்று அர்த்தமில்லை...

இந்த எல்லாக் குணங்களும் கொண்டது நான் என்றும் அர்த்தமில்லை...

என் சூழ்நிலை தான் என்னை இவ்வாறு வாழ்வதற்கு மாற்றி வைத்திருக்கிறது.

ஆனால் எப்போது வேண்டுமானாலும் எனக்கு தோன்றினால் நான் எப்படியும் மாறுவேன்.

                                           -கண்ணீர்த்துளி-

                                           -Sharoafathi-

என்னுள்ளே..Where stories live. Discover now