அவள் அப்படித்தான்...

14 1 0
                                    

அவளது மௌனம்-திமிரல்ல
அது அவளது சுயத்தை தொலைத்தன் அறிகுறி....

அவளது கண்ணீர் - பயமல்ல
அதீத வலியின் கட்டுக்கடங்கா வெளிப்பாடு அது....

அவளது சோகம் - தோல்வியல்ல
அது அணைகடந்த ஏமாற்றங்களின் பிரதிபலிப்பு....

அவளது கோபம் - அடக்கமின்மை அல்ல உரிமைக்கான உரத்த குரலது...

அவளது  உணர்வுகளெல்லாம்  விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவை...
அவள் சற்று வித்தியாசமானவள்தான்...
ஏனெனில், அவள் அப்படித்தான்!

                                          -கவித்துளி-
                                          - SharoaFathi-

என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora