அன்னைக்கு தாய்மை நிலை தந்து.. தந்தையை வாழ்நாள் சாதனையாளர் என உணரவைத்த பெண் குழந்தையவள் பேரழகு தான்..!!
பாவைக்கும் மையிட்டு, தலைவாரி பூச்சூடி அழகுபார்க்கையில்..பெண் பிள்ளையவள் பேரழகு தான்..!!
உழைப்பின் களைப்புதனை உடலூன்றிப் போக்குகையில்.. தந்தைக்கு மகள் பேரழகு தான்..!!
முணு முணுப்புக்களோடேனும் தன் ஏவல்களுக்கேற்று துலங்குகையில்..தனையனுக்கு தங்கையவள் பேரழகு தான்..!!
ஊடலிலும் கூட தன் தேவையறிந்து இன்னுமொரு தாயாக மாறுகையில்.. தம்பிக்கு தமக்கையவள் பேரழகு தான்..!!
மலைபோன்ற கவலையையும் தன் ஆறுதலில் பனிபோல் கரையவைத்து தோள் கொடுக்கையில்..தோழனுக்கு தோழியவள் பேரழகு தான்..!!
காதல் மொழி பேசி கடைக்கண்ணால் ரசிக்கையில்.. காதலனுக்கு காதலியவள் பேரழகு தான்..!!
இல்லறத்தை நல்லறமாக்கி இனியவை பல உணர்த்துகையில்.. கணவனுக்கு மனைவியவள் பேரழகு தான்..!!
தாய் போல அரவணைத்து அகரம் கற்பிக்கையில்.. மாணவனுக்கு ஆசிரியையவள் பேரழகு தான்..!!
கதைகள் பல சொல்லி கொஞ்சி விளையாடுகையில்.. பேரனுக்கு பாட்டியவள் பேரழகு தான்..!!
தன்னை உருக்கி தன்னவருக்கு ஒளி பரப்பும் அவள் வீடாள மட்டும் பிறக்கவில்லை.. அவள் நாடாளப் பிறந்தவள்..
அவளைத் துதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காதீர்! மாறாக மதிக்க கற்றுக்கொள்வோம்..!!இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!
-கவித்துளி-
-Sharoafathi Buhary-Sry readers...naan already ithe poem e photo va update pannen.
Athu ungalukku read panne kashtama irunthu irukkum.
So ippo type panni update panniruken
I hope you will enjoy it and support me ....so marekkame padichittu votes and comments pannunge ..Thank you dears