எல்லா பேரூந்துப் பயணங்களும் எல்லோருக்கும்
ஒரேமாதிரி அமைவதில்லை...ஒரு சிலருக்கு,
ஜன்னலோர இருக்கை..
கன்னம் வருடும் காற்று..
வழிநெடுக இயற்கையின் வனப்பு..
வலி மறக்க இசையின் அணைப்பு..இன்னும் சிலருக்கு,
கதவோர படிக்கட்டு..
கன்னம் வழியும் வியர்வை...
வழிநெடுக சன நெரிசல்
வலி எடுக்கும் கால்கள்..வாழ்க்கையும் இது போலொரு பயணம் தான்..
சிலருக்கு சுகம்..
சிலருக்கு ரணம்...
எது எப்படியோ வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகவேண்டும்
எல்லோரையும் போல...-கவித்துளி-
-Sharoafathi-