இன்பம் கண்டால் குதூகலிக்கும்..
துன்பம் என்றால் அப்பிறைக்கும்..
ஆச்சரியம் என்றவுடன் அகலவிரியும்..
யோசனை எனின் ஓடித் திரியும்...பீதி கண்டு மூடிக்கொள்ளும்...
காதல் மொழி பேசியே கொல்லும்..
மாட்டிக்கொண்டால் நடனமாடும்..
கோபம் வந்தால் செங்கனலாகும்..மோகம் நிறைந்தால் காந்தமாகும்..
நிம்மதி வந்தால் சாந்தமாகும்...
இத்தனை மாயாஜாலங்களும் செய்யும்
இறையின் அரும் வரம் - கண்கள்..-Sharoafathi-