நிலவினை ரசிக்கையில் அநேகமானோருக்கு நெருங்கியவர்களின் முகங்கள் அதில் பிரதிபலிக்குமாம்...
ஆனால் எனக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை..
வெண்ணிலாவின் களங்கங்கள் தான் தென்படுகின்றன...எது எப்படியோ.. களங்கங்கள் கூட என் கருமணிகளுக்கு கவிக்கான கரு தானே..
அதனால் கலங்காமல் ரசிக்கிறேன் நிலவின் களங்கங்களையும் ரசனையோடு...!
-கவித்துளி-
-Sharoafathi-