துள்ளித்திரிந்த நான்- இன்று
அள்ளித்திரிகிறேன் சோகங்களை...புன்னகைத்த அதரங்கள்-இன்று
மென்னகையுமின்றி அசையுது....பூரித்துத் திளைக்கும் கண்களோ
கரித்துப் பொழியுது கண்ணீரை...காற்றினால் கன்னம் வருடிய கூந்தலோ.....
காயத்தின் சின்னம் சூடிச் சிறையினிலே...அன்றும்.. இன்றும் தனிமைதான்
எனக்கு சொந்தமானது நிரந்தரமாய்...அன்று இன்பத்தில் திளைத்த கணங்கள்..
இன்று துன்பத்தில் முளைத்த ரணங்களாய்....விதியின் விஸ்வரூப விளையாட்டின் நடுவிலே...
விடை தெரியா வீண் புதிர்களின் மடுவினிலே...தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் நான்...
மீள் பெறுவேனா உன்னால் தொலைத்தவற்றை...???-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-