காலம் பதில் சொல்லும்!

9 3 2
                                    

ஒரு பெண்...
தான் இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதில் வரும் சிறு கஷ்டங்களையும் வெளியில் சொல்லக் கூடாது...!

மீறி வெளியில் கொட்டிவிட்டால்..
அதற்கும் அவளையே குற்றம் சாட்டி குத்திப் பேசும் கொடூரர்கள் நிறைந்த உலகிது...

கஷ்டமோ ,நஷ்டமோ... எல்லாம் கானல் என காணாமல் போய்விடும்...

ஆனால்...நஞ்சிலூறிய நெஞ்சங்களின்... நயமான நக்கல்களெல்லாம்.... நங்கூரமென நெஞ்சில் பாய்ந்து... நிம்மதியில்லாமல் நிலைகுலைய வைக்கும் வல்லமை கொண்ட நிலையான நித்தனைகள் அவை..!

ஆகவேதான்..
நீ இஷ்டப்பட்டதை எந்த கஷ்டத்திலும் கைவிடாமலும் ....
களங்கப்படுத்தாமலும் நாசூக்காக கடந்து விடு பெண்ணே...
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில்....!!

                                            -கவித்துளி-
                                          -Sharoafathi-

என்னுள்ளே..Tempat cerita menjadi hidup. Temukan sekarang