அவள் ஒரு தொடர்கதை...

22 5 7
                                    

சாதிக்கத் துடிக்கின்றாள்..
பட்டங்கள் பெறுகின்றாள்..
பலவித ஆசைகள் பூட்டி
உள்ளுக்குள் அழுகின்றாள்...

தந்தை என்ன சொல்வாரோ ???
தாயின் அனுமதி கிடைக்குமோ ???
கணவன் கடுப்பாகி விடுவானோ ???
கூடப் பிறந்தவன் முறைப்பானோ ???
பக்கத்து வீட்டாள்
பார்வையில் வீழ்வேனோ ??
ஆயிரம் பயம் அவளுக்குள்...

அந்தோ
குழந்தைப் பிறந்ததும்
பட்டங்கள் பறக்கின்றன..
பலவித சிறைக் கம்பிகள்
அவளைச் சுற்றிப் பொருத்தப்படுகிறன

சிறைப் பறவைக்கு
சிரிக்கப் பழக்குகின்றனர்
அழுகைக்கு அர்த்தங்கள்
மாற்றப்படுகின்றன...

அவளைப் போல்
இன்னுமொரு பெண் உயிர்
பத்திரமாய்  வளர்க்கப்படுகிறது
தொடர்க்கதையாய்....
                                  
                                      -கண்ணீர்த்துளி-
                                      -Sharoafathi-

                             

என்னுள்ளே..Where stories live. Discover now