"ராகவி, நீ உன் அண்ணனோடு ப்ரண்ட் மாதிரி தானே பழகுற. நீ தான் எப்படியாவது அவர்ட உன்ட காதல சொல்லி, சிவா வீட்டுக்கு அனுப்ப பார்க்கனும். உன் கையில் தான் எல்லாம் இருக்குடி. மற்றத சிவா பார்த்து கொள்வதா சொன்னாரு" என்று திவ்யா கூற,"பயப்படாதே. உன் அண்ணன் கொஞ்சம் கண்டிப்பு தான். அவர் உடனே சம்மதிக்க மாட்டாரு தான். அப்படி சமம்திக்கலன்னா நீ அப்செட் ஆக கூடாது. இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது அவர் அருமை தங்கச்சியின் ஆசைய எப்படியாவது நிறைவேற்றுவார். எல்லாம் நடந்த பின்னர் கவலப்படாம, காலத்த தாமதிக்காம இன்டைக்கே சொல்லிரு. சரியா?? " என்று மதியும் கூற,
பயத்துடன் சரி என்று தலை அசைத்தாள் ராகவி.வீட்டுக்கு ஸ்கூட்டியை செலுத்தும் வழியெல்லாம் அப்பா ஸ்தானத்தில் இருந்த சக்தி ஐயாவை பற்றியே சுழன்று கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்தும் அதே யோசனை. புதிய பாஸ் எப்படி இருப்பாரோ? என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைய,
"என்ன மேடமிற்கு பலத்த யோசனை??" என்று தங்கை நிலா கேட்க,
"ஒன்றுமில்லை" என்று தனி பதில் அளித்துவிட்டு wash எடுக்க சென்றுவிட்டாள் திவ்யா.Fresh ஆகி விட்டு ஹாலிற்கு வந்த திவ்யாவிற்கு அவளது தாய் தேநீர் கோப்பையை கொண்டு வந்து கொடுத்துவிட்டு,
"திவ்யா, எதிர்வீட்டுக்கு போனேன் மா. உனது வயதில் அவர்களுக்கு மகள் ஒன்றும், உன்னை விட 4வருடங்கள் கூடிய ஒரு மகனும் கொண்ட குடும்பம், தாய் இல்லத்தரசி, தகப்பன் ஓய்வுபெற்ற அதிபர், மகன் நல்ல கம்பனி ஒன்றில் வேலை செய்கிறான். மகள் ஆசிரியர். எல்லாரும் இடமாற்றம் பெற்று வந்து இருக்காங்க. இரக்கமான பண்பான நல்ல குடும்பம். இன்று பகல் நான் தான் சமைத்து கொடுத்தேன் அவர்களுக்கும். நீயும் போய் பார்த்துவிட்டு வாம்மா " என்று கூற, அரைவாசியை மட்டுமே காதில் வாங்கிக் கொண்டிருந்த திவ்யா " ம்ம்ம் ம்ம்ம் " என்று மட்டும் பதில் சொல்ல," ஏன் மா? நீ தானே ரொம்ப ஆர்வமாக அவர்களை பற்றி அறிய ஆசப்பட்டாய். இப்போ என்னவாயிற்று?? " என்று தாய் கேட்க,
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...