💗 Episode 33 💗

1.9K 65 53
                                    


திவ்யா கண்களை திறக்க ரவி அவளை தாங்கிக் கொண்டிருந்தான். Sofa வில் அவளை இருக்க வைத்து, ஆதியிடம் நான்கு கேள்வி கேட்க அவனை நோக்க, திவ்யாவின் கண்களும் விரிந்து ஆதியை பார்த்துக் கொண்டிருந்தன.

ஆதியை தேடி வீட்டுக்கு ரியாவின் நண்பர்கள் நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருக்க, ஆதி வீட்டிலிருந்து திவ்யாவின் வீட்டுக்கு நுழையும்போது அவனின் முதுகுப்புறத்தையும், side முகத்தையும் கண்ட ரியா அவனை பின் தொடந்தாள். அவனின் அது வீடல்ல என்று தெரிய, அவன் வரும்வரை காத்துக்கொண்டிருக்க, திவ்யாவுடன் ஆதி பேசும்போது தன் பெயர் கேட்க அவள் கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள். நான்கைந்து வருடங்கள் சென்றும் தன்னை மறக்காது இன்னும் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஆதியின் கூறியவைகள் மனதில் கல்லாய் பதிந்தன. இந்த திருமணம் நடக்காது. ரியாவை தேடி திருமணம் செய்வேன் என்று சொல்லியதும் மட்டில்லாத சந்தோசத்தால் ஆதியை நோக்கி ஓடி வந்தாள். திவ்யாவின் நிலையை கண்டு முன் திரும்ப ஓடி வரும் ரியாவை ஆதியின் கண்களோ நம்ப மறுத்தன. ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருக்க, ரியா நெஞ்சில் புதைய, இது கனவல்ல நனவே என்று அவளை கட்டியணைத்தான். அவனின் சேர்ட்டு நனையவே, புதைந்த முகத்தை தாங்கி "ரியா, போதும் இனி அழாதே" என்று கண்ணீரை துடைத்து முத்தமழையை முகம் எங்கும் சந்தோசத்தால் கொடுக்க, அவன் இருக்கும் இடம், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க தவறவிட்டால் ஆதி. அவனின் மனதிலுள்ள அவள் பற்றிய ஏக்கம் மட்டும் பார்ப்போருக்கு புரியாமல் இல்லை.

"யார் இது?? என்ன நடக்கின்றது?? " என்று திவ்யாவின் தந்தை கேட்கவே, ஆதி ரியாவை விலத்தினான்.
" இது தான் நான் காதலித்த பெண் ரியா. இவளை மறக்கவே நான் மும்பாயிற்கு வந்தேன். இங்கே அவளைப் போன்ற பழக்க வழக்கங்களுடன் திவ்யாவை சந்தித்தேன். ஆனால் ஒருபோதும் அவளை நண்பியாக அன்றி வேறொரு எண்ணத்தில் பார்க்கவில்லை. வீட்டில் கட்டாயப்படுத்தி இத் திருமணத்திற்கு சம்மதித்தேன். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன் ரியாவை மறந்து திவ்யாவை மனதில் ஏற்க. ஆனால் என்னால் முடியவில்லை. எனவே அவளிடம் விலகியே நின்றேன். திவ்யா விடம் இதை பற்றி சொல்ல தயங்கினேன்.திருமணமாகிய பின் நான் ரியாவை காதலிக்கின்றேன் என்று திவ்யாவிற்கு தெரிய வந்து தினமும் அவள் மனதிற்குள் சாகும்வரை விட இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று சொல்ல வந்தேன். நான் உன்னை ரொம்ப காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்துவிடு திவ்யா. என் சூழ்நிலையையும் என்னையும் புரிந்து கொள்" என்று கூற, திவ்யா மேலும் எதுவும் கேட்காமல் வாயை கைகளால் பொத்தி அழுது கொண்டு அறையை நோக்கி ஓடினாள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Tempat cerita menjadi hidup. Temukan sekarang