💗 Episode 22 💗

2.1K 69 9
                                    


ஆதி திவ்யாவை காரில் அழைத்துக் கொண்டு செல்லும்போது,
"I am sorry திவ்யா. உன்னிடம் தந்த சிறிய வாக்கை கூட என்னால் காப்பற்ற முடியவில்லையே. நேற்று நண்பனை கண்டவுடன் அவனிடம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து கவலையை மறைக்க மது குடி கூடிவிட்டது. Sorry" என ஆதி கூற,
"it's okay ஆதி, ஆனால் ராகவியை எப்படி சமாளிப்பது என்று தான் யோசிக்கிறேன். நான் இன்று இருந்து முடிந்து.." என்று யோசனையுடன் கூற,
"நான் தானே இதற்கு காரணம். நான் எப்படி சரி சமாளிக்கிறேன். You don't worry. I will manage. பசிக்கின்றதா??"
என்று கரிசனையுடன் கேட்க, அவனின் அன்பில் உருகினாள்.  ஆம் என்று தலையசைக்க, பாதை ஓரத்தில் உள்ள சின்ன சாப்பாடு கடையில் நிறுத்தினான்.
"are you okay with shop??" என்று கேட்க,
"I am okay" என்று கூறினாலும், அவளது வாழ்வில் அதுவே முதன் முதல் அனுபவம். எவ்வாறு எப்படி உண்ணுவது என்றும் அவள் அறியவில்லை.

கண் கவர்ந்த இனிப்பு உணவுவகைகள், வடைகள், பாணிப்பூரிகள், தேநீர் காணப்பட, ஆதியை பார்த்து கையில் இலையை வைத்துக்கொண்டு வடையை சாப்பிட்டு, சுடச்சுட இருக்கும் தேநீர் கோப்பையை பிடிக்க தடுமாறி போனாள் திவ்யா. புடவை நுனியால் பிடித்து பருகும் அவளை சிரித்தபடி ரசித்து கொண்டிருந்தான்.

பாணிப்பூரியை வாங்கி அவளிடம் கொடுக்க, திகைத்து நின்றாள்.
"என்ன திவ்யா? சாப்பிட தெரியாதா??" என்று கேட்க,
தலையை இல்லை என்று ஆட்ட, பாணிப்பூரியை ஒரேடியாக வாயில் போட, அவளும் அவன் செய்ததை பார்த்து செய்தாள். ஆனாலும் பாணியானது அவளின் உதட்டு ஓரத்தில் வடிய, ஆதி தன் கைக்குட்டையால் அவளின் உதட்டோரத்தை துடைக்க, திவ்யாவின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
இரண்டு கண்களும் ஒன்றோடு ஒன்று கலக்க, அவ்வேளை தொலைபேசியானது அலறியது. அச் சத்தத்தை கேட்டு இருவரும் இவ்வுலகிற்கு வர, தொலைபேசியை எடுத்து கொண்டு 5 நிமிடத்தில் வந்து சேர்ந்து, "வா போகலாம்" என்று அவளை அழைத்து கொண்டு போக, ராகவியின் திருமண வைபவ இடமும் வர, தோழியை நோக்கி விரைவாக நடந்தாள் திவ்யா. மணவறையில் தயாராகி இருந்த ராகவி கோபத்தால் முகத்தை திருப்ப,
"sorry டி, என் situation ஐ புரிந்துகொள்ளுடி," என்று சொல்லிக் கொண்டிருக்க, கேட்கும் நிலையில் ராகவி இருக்கவில்லை. மதியும் அவளை சமாதானப்படுத்த, அது தோல்வியில் போக, துக்கத்துடன் திவ்யா இருப்பதை கண்ட ஆதி, தொலைப்பேசி அழைப்பு விடுக்க, நடந்தவற்றை கூற,
"I will handle, you don't worry" என்று ஆதி கூறினாள். அவன் காட்டும் அக்கறை அவளை சந்தோசப்படுத்தியது.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Donde viven las historias. Descúbrelo ahora