💗 Episode 38 💗

2.1K 71 53
                                    


வார இறுதி நாட்களில் ரவியும் திவ்யாவும் பைக்கில் ஊர் சுற்ற போவர். ரெஸ்டாரண்ட் இல் சாப்பிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாளாவது செல்வதை வழக்கமாக்கி கொண்டனர்.
எவ்வளவு வேலையாக இருந்தாலும் திவ்யாவிற்காக அவன் நேரம் ஒதுக்க தவறுவதுமில்லை. திவ்யா கூறும் நேரம் தவிர, அவள் வாடி இருந்தால் அவளை மும்பாயிற்கு அழைத்து செல்வான் திவ்யாவின் வீட்டிற்கு.
திவ்யாவை இயலுமான வரை சந்தோசமாக வைத்திருந்தான்.இதனால் ஆதியை சுத்தமாக மறந்தும் போனாள்.
நண்பர்கள் ஏதும் ஆதியின் பெயரை சொன்னால் தவிர அவனை நினைவுக்கு வருவதே இல்லை.
தன் முதல் காதலை நினைத்து வெட்கமடைந்தாள். தன் காதலை தவறான, தன்னை புரிந்து கொள்ளாதவரிடம் உபயோகித்து விட்டேனே. என்று மனம் நொந்து கொள்வாள். தான் என்ன செய்ததற்கு இவ்வளவு நல்ல கணவனாக ரவி கிடைத்து இருப்பான்? என்று சிலவேளை ஆச்சரியமும் படுவாள்.
தனது காதலை ரவியிடம் விரைவில் சொல்லி, ரவியை மேலும் சோதிக்காமல் கணவனாக ஏற்றுக்கொள்ள யோசித்தாள்.

அன்றிரவு ரவி " திவ்யா, உனக்கு போரா வீட்டில் இருக்க?? நீ ஏதும் வேலை செய்கிறாயா? பழைய இடத்திலே வேலையில் join ஆகிரியா?" என்று மனமின்றி கேட்க,
" பார்ப்போம் ரவி" என்று பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. ரவியும் அதட்டிக் கொள்ளவில்லை. இப்போது தான் அவள் சந்தோசமாக இருக்கிறாள். மீண்டும் அங்கே போய் வேலை செய்து மனம் குழம்புமோ? அங்கே வேலை செய்தால், நான் இங்கே அவள் அங்கே. என்ன வாழ்க்கையாக ஓடும்? என்று ரவியின் மனதில் யோசனைகள் ஓடிக் கொண்டு இருந்தன.

அடுத்த நாளை காலை ரவியிடம் தனக்கு மும்பாயுக்கு வேலை சம்பந்தமாக செல்ல வேண்டும் என்று சொல்ல ரவியின் முகமோ சற்று மாறியது. ஒன்றும் கேட்காமல் அவளை கூட்டி சென்றான். ஆதியின் கம்பனியின் முன் திவ்யாவை இறக்கிவிட்டு, சிறிய வேலை ஒன்றுக்காக ரவி சென்றான். ரவியின் மனமோ அலைப் பாய தொடங்கியது.

தொலைபேசி அழைக்கவே, காதில் வைக்க, "திவ்யா, 5 நிமிடங்களில் வருகிறேன்" என்று கூறி அவளை ஏற்றிக்கொண்டு திவ்யாவின் வீட்டிலும் இருந்துவிட்டு, தங்கள் வீட்டுக்கு போக முற்படும்போது,
"ரவி, நாம் இந்த restaurant இற்கு கொஞ்சம் செல்லலாமா?" என்று கேட்க,
அவளின் ஆசையை நிறைவேற்றும் முகமாக இறங்கி, இருவரும் இரண்டு காபி ஓடர் செய்து, பேசிக்கொண்டு இருக்க,
" திவ்யா, எப்படி வேலைக்கு போக போகிறாய்? உன் வீட்டிலா தங்கி இருக்க போகிறாய்?" என்று கேட்க,
" ஹாஹா. நான் இன்று ஏன் ஆபிஸ் போறேன் என்று தெரியாதா?? "
இல்லை என்று ரவி தலையாட்ட,
" நான் job அ resign பண்ணி விட்டேன் ரவி"
"  what?? சிறு வயதிலிருந்து உன் கனவே தொழில் செய்ய வேண்டும் என்று. உன் கனவு கலைந்து போகிறமைக்கு நான் தான் காரணமா? " என்று நொந்துக்கொள்ள,
ரவியின் கைகளை பற்றி,
"யார் சொன்னது நான் தொழில் செய்ய மாட்டேன் என்று. நான் தொழில் செய்வேன். அதுவும் என் கணவனின் கடையில். அன்று வந்தபோது designer தேவை என்ற vacancy ஐ கண்டேன். பாஸ் என்னை தொழிலுக்கு எடுப்பீர்களா? Interview எல்லாம் அவசியமா??" என்று கேட்க,
சந்தோசத்தில் மிதக்கலானான் ரவி.
மறுநாளிலிருந்து வேலைக்கு சேர்ந்தாள் திவ்யா. தினமும் கடைக்கு செல்லாது வீட்டில் தன் வேலைகளை லாப்டொப்பிலும் செய்து வந்தாள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now