💗 Episode 10 💗

3.1K 88 10
                                    


அவளின் கை அசைவை கண்ட தாயும் தந்தையும் சந்தோச கண்ணீர் வடித்து கொண்டு வைத்தியரை தேடி ஓடினார்கள். செய்தியை கேட்ட வைத்தியரும், தாதிமார்களும் விரைந்து சிகிச்சையளித்தனர். இன்று தான் இந்த patient இன் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்று இவளுக்கு பொருத்தப்பட்ட அனைத்து மெசின்களையும் கழற்ற உத்தேசித்தோம். ஆனால் இவ்வாறான case களை நாம் முதன் முதலாக காண்கிறோம். This is a miracle என்று வைத்தியர் கூறியதோடு, அவசரமாக உங்கள் மகள் கண் திறப்பாள். ஆனால் சில சமயம் பழைய நினைவுகளை மறந்து இருக்க வாய்ப்பு உண்டு என்று கூறியது தாமதம் இரு முகங்களில் புன்னகையும் மலர்ந்தது. அவர்களுக்கு தேவைப்பட்டதும் அதுவே.

வார இறுதி நாளில் ஸ்வர்ணாவுடன் திவ்யா கடற்கரைக்கு செல்ல முற்படும்போது பொதுவாக அங்கு சனநெரிசல் காணப்படும் ஆகவே பெரிதாக பாதுகாப்பு இல்லை என்று ஆதியும் வருவதாக கூற, திவ்யா மனதிற்குள் சந்தோசமடைந்தாள்.

கடற்கரை கொஞ்சம் தூரம் என்பதால் குறித்த இடத்துக்கு 1 மணித்தியாலம் ஆவது தேவைப்படுமே. எவ்வளவு நேரம் தான் மௌனமாக போவது?? என்று திவ்யா ஸ்வர்ணாவின் காதில் ஏதோ சொல்ல,
"அண்ணா, திவ்யாவிற்கு செம போர் அடிக்குதாம் உங்க கூட போறது. ஏதாவது பாட்டு போடட்டாம்" என்று கூற,
"அய்யோ, இல்லை ஆதி போஸ், நான் அப்படி ஒன்றும் கூறவில்லை" என்றபடி,
சிறு குத்துகளை கொடுக்க அதனை பரிசாக வாங்கி கொண்டாள் ஸ்வர்ணா.
அவர்களின் சிறு சண்டையை கண்ட ஆதியின் முகம் மலர்ந்து மெதுவாக புன்னகை புரிய, தன்னவனின் புன்னகையை காரின் நேர் கண்ணாடியில் இரசித்தாள் திவ்யா.

வானொலியை on செய்ய,

சொல்லத்தான் நினைக்கிறேன்... 
சொல்லாமல் தவிக்கிறேன்.. 
காதல் சுகமானது.. 
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. 
தேடல் சுகமானது.. 
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. 
வெக்கங்கள் வர வைக்குறாய்.. 
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. 
தனியே அழ வைக்குறாய்.. 
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. 
காதல் சுகமானது..! 

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now