💗 Episode 28 💗

1.8K 66 48
                                    


"என்னடா, உன்னை 3 வருடங்களுக்கு பின் காண்கிறேன். மெலிந்து போய் இருக்கிறாய். உனக்கெல்லாம் ஆள் இருக்கும்போது சந்தோசத்திற்கு கொழுக்கவேண்டுமே தவிர, மெலிய கூடாதே. Are you okay டா??" என்று கரிசனையுடன் கேட்க,
" அதெல்லாம் விடுடா. நீ எப்போது இந்தியா வந்தாய்? Life எல்லாம் எப்படி போகுது?? என்று கதையை மாற்ற,
"என் life எப்படி போகுது என்று பிறகு சொல்கிறேன். உன் கதையை சொல்லு." என்று கட்டாயப்படுத்தினான்.
ரவிக்கும் தனது மனப்பாரத்தை கீழே இறக்கி வைக்க இது நல்ல சந்தர்ப்பம் என்று விளங்கி, நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

 ரவிக்கும் தனது மனப்பாரத்தை கீழே இறக்கி வைக்க இது நல்ல சந்தர்ப்பம் என்று விளங்கி, நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.


"என்னடா சொல்கிறாய்? திவ்யாவை பற்றி நான் இப்படி எண்ணவில்லை. மற்ற பெண்கள் போல் இப்படி ஏமாற்றுவாள் என்று" என்று திட்ட ஆரம்பிக்க,
"நிமல், திவ்யாவை நான் இன்றும் காதலிக்கிறேன். அவளை பற்றி யாரும் தப்பாக சொன்னால் தாங்க மாட்டேன். சிறுவயதில் முடிவு செய்தது சரியில்லையே. இப்போது திவ்யா மும்பாயில். அவளின் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. கல்லூரியில் படித்தாள், என்னை விட படித்து இருக்கிறாள். வளர வளர அவளின் அழகும் கூடிப்போய் விட்டது. எனவே நான் அவளுக்கு பொருத்தம் இல்லை என்று எண்ணி இருக்கலாமே. அவளுக்கு திருமணம் பேசி உள்ள பாஸ், படிப்பிலும் அழகிலும் என்னை மிஞ்சவர் டா. திருமண வாழ்க்கை என்பது சாகும்வரை அந்த நபருடனே வாழ வேண்டும் அல்லவா? திவ்யா அவளது துணையை தன் விருப்பப்படி தெரிவு செய்துவிட்டாள். அவளை பெற்றுக்கொள்ள எந்த தகுதியும் என்னிடம் இல்லையே. அவள் சந்தோசமாக இருக்கட்டும்" என்று கண் கலங்க கூற,
" என்னடா? Over ஆ தான் பேசுகிறாய்?? நீ அவ்வளவு பெரிய தியாகியா?? 4 கேள்வி அவளிடம் கேட்க கூடாதா?? இவ்வளவு நாள் உன்னிடம் பழகிவிட்டு இன்னொன்று காண, அதன்பின்னால் சென்றது நியாயமா?? அவன் உன்னை எல்லாவற்றையும் விட மிஞ்சலாம். ஆனால் குணத்தால் இருக்க முடியாது. இவளை மறந்துவிடு. உன்னை பெற அவள்தான் கொடுத்து வைக்கவில்லை. அதுசரி, அம்மா என்ன சொல்கிறார்கள்?? "
" கடவுள் இருக்கிறான். அவனின் நாட்டப்படி எல்லாம் நடக்கட்டும். யாரினதும் மனதை நோகடித்து இன்பம் காண தேவையில்லை டா. கல்யாணம் பேசிக்கொண்டிருக்கிறார். அன்று வரன் ஒன்றும் கொண்டு வந்தார். இப்போதைக்கு வேண்டாம் என்றேன்"
" உனக்கு பைத்தியமா?? அப்போ தேவதாஸ் போல் கொஞ்சம் காலம் இருக்க வேண்டுமா?? " நிமல் கடுப்பாகி கேட்க,
" திவ்யாவின் கல்யாணத்திற்கு பிறகு யோசிக்கலாம். இப்போதைக்கு இந்த கதையை விடுடா" என்று ரவி கெஞ்ச,
" நான் 40 நாள் விடுமுறையில் வந்துள்ளேன். உனக்கு கல்யாணமொன்று நிச்சயம் செய்துவிட்டு தான் நான் செல்வேன். நகரத்து பெண்களை நம்ப முடியாது. உன் மனதிற்கு உனக்கு ஏற்றவர் இங்கே கிடைப்பாடா. அதெல்லாம் சரி, திவ்யா திருமணத்திற்கும் போவியா??" என்று கிண்டலாக கேட்க, ஆம் என்று தலையசைத்தான் ரவி.
" ஏன் தாலியையும் எடுத்துக் கொடு. " என்று கோபமாக நிமல் கூற, பரிதாபமாக ரவி பார்க்கவே, அவனின் கோபமும் மறைந்தது.
பின் பழைய பாடசாலை கதைகளை கதைத்து, ரவியின் மனநிலையை மாற்றினான் நிமல்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) حيث تعيش القصص. اكتشف الآن