ஸ்வர்ணாவின் சந்திப்பு 💕

3.4K 91 10
                                    


காலிங் பெல் அடிக்க, எதிர் வீட்டு பெண் சிரிப்புடன் கதவை திறக்கவே, திவ்யாவிற்கு அச்சிரிப்பே மனதை வென்றுவிட்டது.
"உள்ள வாங்க" என்று அவளை வரவேற்று உள்ளே அமர வைத்தாள்.

இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
"நான் ஸ்வர்ணா. ட்ரான்ஸர் ஆகி பக்கத்து பாடசாலையில் ஆசிரியரா இருக்கிறேன்" என்று
"அதுசரி திவ்யா, தினமும் நீங்க வேலைக்கு போறத கண்டு இருக்கிறேன். எங்க வேலை செய்றீங்க?" என வினவ,
"டவுன்ல இருக்கிற கம்பனியில 2 வருஷமா வேலை செய்றேன்"

"பாஸ், ஸ்டாஃப் ஆட்கள் எல்லாம் எப்படி? நல்லமா? " என்று வினவிய தான்,
" அதை மட்டும் கேட்காதீங்க ஸ்வர்ணா. பழைய பாஸ் நல்லம். இப்போ உள்ளவர் கொஞ்சம் ஓவர். இவர் வேலைக்கு வந்தது போன செவ்வாய்கிழமை. எப்போதும் வேலை வேலை என்று தான் இருப்பார். திடீரென வேலை தருவாரு. வேலை ஓஃப் நேரத்திலும் செய்ய சொல்வார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பே இருக்காது. ஒரு சிடுசிடு மூஞ்சொன்று. எல்லாரும் பயந்து சாகுர. அந்த அளவு அவர்னா பயம் எல்லாருக்கும்" என்று மனதில் உள்ள ஆத்திரத்தை கொட்டினாள்.

" அப்போ வாழ்க்க வெறுக்குமே. பாஸ் அப்படி இருந்தா. என்ட பிரன்ஸிபலும் கொஞ்சம் ஒரம் தான். சரி திவ்யா, உங்க குடும்பத்த பத்தி சொல்லேன் " என்று திவ்யாவிடம் வினவ,
" என் தந்தை பக்கத்து ஊர்ல அதிபர், அம்மா இல்லத்தரசி. எனக்கு ஒரே ஒரு செல்ல தங்கை. அவள் பெயர் நிலா. பக்கத்து கல்லூரியில் பிகோம் படிக்கிறாள். " என்றபடி வாழ்வில் நடந்த அக்கா தங்கை பற்றிய நகைச்சுவை சம்பவங்கள் கூறவே, வாய்விட்டு சிரித்தாள் ஸ்வர்ணா.
சிரிப்பொழியை கேட்ட தாயின் கண்கள் கலங்க, "எனது மகனும் இவ்வாறு சிரித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன" என மனம் வருந்திற்று.

அவளும் தனது குடும்பத்தை சொல்லலானாள். தனது உடன்பிறவி அண்ணனை பற்றி முழுக்க முழுக்க கத. அண்ணன் புராணம் கேட்ட திவ்யாவிற்கு காதில் இரத்தம் வராதது தான் குறை.

இருவரும் மனது விட்டு கதைத்துக்கொண்டு இருக்க, பல வருடங்கள் பழகிய உணர்வு இருவருக்கும் ஏற்பட்டன.
குளிர்பானத்துடன் வந்த அவளின் தாயின் பேச்சிலும் கரைந்து போனாள் திவ்யா.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now