💗 Episode 39 💗

2.5K 76 19
                                    


கேர்ட் திறப்பட, கண்ணை கவரும் பெரிய வெள்ளை மாளிகை போன்ற அந்த வீட்டை, பெரிய அழகிய தூண்கள் மேலும் அழகூட்டியன. முன் படி முழுவதும் வெள்ளை டைல்ஸ் பதிவுசெய்து, அழகிய சாய்கதிரைகள் போடப்பட்டும் இருந்தது. யாரின் வீடு இது? பணக்கார ஒருவரின் வீடாக இருக்கும் போல. ஏன் ரவி  இங்கு வர சொன்னான்? ரவியை இன்னும் வரவே இல்லையே? நான் ஏன் கதவை திறக்க வேண்டும்? பயமாக இருக்கிறதே என்று எண்ணும்போது ரவியின் அழைப்பை பதிலளித்தபடி சுற்று முற்றும் பார்க்க, அவ்வீட்டை சுற்றி சிவப்பு நிற ரோஜா செடிகள் வளர்ந்து அவளின் மனதை பறித்து சென்றன.

"என் நண்பனின் வீடு திவ்யா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"என் நண்பனின் வீடு திவ்யா. நாளைக்கு ஏதோ இங்கு வைபவம் என்றான் அதுதான் வந்து சுத்தம் செய்ய உன்னையும் அழைத்தேன். நான் இன்னும் 10 நிமிடத்தில் வந்து விடுவேன்" என்று அழைப்பை வைக்க,
ரோஜா செடிகளுடன் ஓர் செல்பியை எடுத்துவிட்டு கதவை திறக்க, அவ்வீட்டின் அழகில் தன்னையே தொலைத்தாள். எல்லாம் அவள் ஆசைப்பட்டதுபோல், ஆசைப்பட்டவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் மின்விளக்குகள், தளபாடங்கள், முழு வீடும் வெள்ளை நிற பூச்சும், வீட்டினுள்ளே ஓரத்தில் ஓர் செயற்கை நீர்வீழ்ச்சியும் அழகை பன்மடங்காக்கியது.

சுற்றி பார்க்கும்போது ஹாலின் நடு மேசையில் ஏதோ கிடக்க, என்னவென்று பார்க்கும் அக்கணம் ரவி "திவ்யா" என்று அழைத்துக்கொண்டு வர, கண் கலங்க ரவியை பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் பெரிதாக விரித்துக்கொண்டு பார்க்க, தான் ரவியின் பிறந்த நாளிக்கு கொடுக்கவிருந்த t-shirt, denim இனை அணிந்து வந்து கொண்டிருந்தான். மேசையில் அவனுக்காக வாங்கிய கேக், வாழ்த்து card, ரோஜாப்பூ, பலூன்களும் மேசையில் ஊதப்பட்டு பரவ செய்து இருந்ததை காண,
" ரவி, இதெல்லாம் உங்களுக்கு எப்படி??" என்று சந்தோச உச்சியில் கேட்க,
" என் பிறந்த நாள் அன்று வீட்டுக்கு வர நல்லாவே தாமதம் ஆகிவிட்டது. அறையினுள்ளே வர இவைகள் உன் கோபத்தால் சிதறி கிடந்தன. இன்றைய நாளிற்காக தான் காத்து இருந்தேன். அது சரி, இந்த வரைபடம் போல் நம் வீடு சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறதா? சாரிடி நண்பனின் வீடென்று பொய் சொன்னேன்" என்று சொல்ல,
திவ்யா 10th grade படிக்கும்போது ஒருமுறை என் வீடு இப்படி தான் இருக்க வேண்டும் என்று இந்த வரைபடத்தை கொடுத்தாள். நீ தான் என் மனைவி என்று வீட்டில் கூறவே, பத்திரமாக இதை எடுத்து அதே போல் கட்ட செய்தேன். இந்த வீட்டுக்கு பூச்சு பூச, சின்ன சின்ன வேலைகளுக்காக நான் அழைக்கப்பட்டு இருந்த மேசன்மார்கள் யாரும் வரவில்லை. எனவே நானும் என் நண்பனும் சேர்ந்து  கடந்த கிழமைகளில் இரவு பகலாக வேலை செய்தோம். அதனால் தான் என் மனைவியை கூட கவனிக்க மறந்துவிட்டேன். உன்னை கஷ்டப்படவும் செய்துவிட்டேன். சாரி திவு" என்று சொல்ல, தன் கணவனின் காதலுக்கு பரிசாக ஓடி வந்து அவனை கட்டியணைத்தாள் திவ்யா.
திருமண முடிந்த இரவு தன் கணவன் சொன்ன அவள் அனுமதியின்றி அவளை தொடமாட்டேன் என்று தந்த வாக்கை முறிக்கும் முகமாக தன் இதழை அவனின் இதழுடன் சிறை செய்தாள் நம் கதாநாயகி திவ்யா.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now