"பாஸ், may I come in??" என்று திவ்யா அனுமதி கேட்க,
"உள்ளே வா திவ்யா" என்று ஆதி மடிக்கணினியில் முகத்தை புதைத்த வண்ணம் கூற,
ஆதியின் முன் வந்து திவ்யா நிற்க, என் கையால் எதுவும் தவறு நடந்துவிட்டதோ? ஏன் கூப்பிட்டார்? என்று மனக்குழப்பத்துடன் இருக்க,
ஒரு கவரை எடுத்து அவளின் கையில் கொடுத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.
அவளும் எதுவும் புரியாமல் கவரை பிரித்து பார்க்க, கண்களும் ஆச்சரியத்தால் விரிய தொடங்கின."இது எப்படி பாஸ் என்னை தெரிவு செய்தார்கள்? நான் அவ்வளவு திறமை இல்லையே. அதுவும் நான் இதற்கு விண்ணப்பிக்கவில்லையே. இது யாருடைய வேலை??" என்று வினாக்கள் அடுக்கடுத்து தொடுக்க,
"உன் திறமை உனக்கே விளங்காது திவ்யா. எத்தனை கம்பெனிகள் பங்குபற்றிய போட்டி தெரியுமா இது?? உன் அனுமதியுடன் தானா விண்ணப்பிக்க வேண்டும்??? அந்த நபரை தெரிந்தால் நீ என்ன செய்வாய்?? உனக்கு இதில் சந்தோசம் இல்லையா? " என்று அவளே நோக்கி கேட்க,
"அப்படி இல்லை பாஸ். நான் டிகிரி எடுத்ததுக்கு இன்று தான் நான் தெரிவுசெய்த பாடத்தின் பொறுமதி விளங்கியது. என் சந்தோசத்துக்கு அளவில்லை பாஸ்.. அந் நபருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். முதலில் நன்றி கூறவேண்டும் " என்று கண்கலங்க கூற,
" நான் தான் விண்ணப்பித்தேன்" என்று ஆதி கூற, அவனை ஆச்சரியமாக நோக்கினாள் திவ்யா.
" பாஸ், நீங்களா?? நாளை treat உடன் வருகிறேன். வேறு என்ன வேண்டும்?? " என்று கேட்க,
" இப்போதைக்கு ஒன்றும் தேவையில்லை திவ்யா. சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வைபவம். பாஸையும் இன்வைட் பண்ணி இருக்காங்க. ஆகவே நானும் வர வேண்டும். உனக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் என்னுடன் என் காரில் வா. வருவாயா???"என்று வினவ,
" எனக்கு என்ன ஆட்சேபனை என் காதலனுடன் வர??" என்று மனம் சந்தோசத்தால் குதிக்க,
" நான் வருகிறேன் பாஸ். என் வாழ்க்கையில் முதல் முறையுமல்லவா? வைபவம் தொடர்பாக எனக்கு எந்தவொரு ஐடியாவும் அனுபவமும் இல்லை. எனவே உங்களுடன் வந்தால் எனக்கு கொஞ்சம் comfortable ஆ பீல் பண்ணுவேன்" என்று திவ்யா கூற, அவனுக்கும் அவளின் நியாயமும் புரிந்தது.
ESTÁS LEYENDO
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...