திவ்யாவின் துணிவு 💕

4.8K 91 1
                                    


"என்னடி இது? என்ன கீறல்கள்?? கைய வெட்டிக் கொண்டாயா?? " என்று கண்கள் இரண்டும் அனல் வீசியபடி கேட்க,
"அது வந்து.." என்று ராகவி இழுத்தாள்.
"ஒன்னுமில்ல. நேத்து சமைக்கிற நேரம் கை வெட்டுப்பட்டு டி. மத்தபடி ஒன்னுமில்ல. ஜஸ்ட் கட்."
என்று சொல்ல,
" ஏன்டி என்கிட்ட பொய் சொல்ற?? என்ன நடந்த?? ஏன் இப்படி கைய வெட்டின??" என்று அவளின் பொய்யை கேட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்றாள் திவ்யா.
அதற்கு மதியோ,
"அவள் ஏற்கனவே அப்சட்ல இருக்காடி. நீ வேற இன்னும் அவள போட்டு வதைக்காம ராகவிட நடந்தது என்ன? இதற்கு பிறகு என்ன செயெயலாம்னு யோசிக்கலாம்" என்று
திவ்யாவை ஒருவாறு சமாதானம் செய்ய,
"கைய வெட்டி சாகுற அளவுக்கு உனக்கு என்னடி ப்ராப்ளம்?? " என்று
ராகவியிடம் நடந்தவற்றை கூறுமாறு அன்புடன் கேட்டாள் திவ்யா சாரி என்று அவளது கன்னத்தையும் தடவிக் கொடுத்தவாறு.

"என் சிவா அதாவது என் லவ்வருக்கு நேற்று வேறு இடத்தில் பெண் பார்த்து, வீட்டார்கள் அவரை கூட்டிட்டுப் போய் பெண்ணை காட்டி இருக்காங்க. அவன் கிட்ட முடிவ கேட்க, இன்று மாலை அந்த பொண்ணுக்கு முடிவ சொல்றேன்னு அவன் சொல்லி இருக்கிறான். அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு தேவல்ல என்று video call செய்து அவன் கதற கதற நான் என் கையை வெட்டிக் கொண்டேன். என் அண்ணா அறைக்கு வர்ர நேரம் தான் நான் வெட்றத நிப்பாட்டிட்டேன். அப்படி வர்லன்னா இந்த நேரத்துக்கு நா செத்தும் இருப்பேன். அதோட நல்ல வேல அண்ணா நான் வெட்டினத காணல்ல" என்று கண்ணீருடன் கூறினாள் ராகவி.

" இதுக்கு தான் உனக்கு படித்து படித்து சொன்னேன். காதல் கீதல் என்று ஒன்றுல்லயும் மாட்டாதே என்று. வெட்டும்போது நரம்பு வெட்டப்பட்டு இருந்தால் என்ன நடந்து இருக்கும். நிம்மதியாக போய் சேர்ந்து இருப்பாயே? உன் பெற்றோர பற்றி ஒரு தடவை யோசித்தாயா? இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை நல்ல இடத்தில் படிக்க வைத்து தொழில் புரிய வைத்தது யாருடி?? சிவா இல்லை.
காதலும் கத்தரிக்காவும். "என்று வாய்க்கு வந்தபடி ஏசியபடி திவ்யா போக, மிகவும் நொந்துப்போனாள் ராகவி.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Dove le storie prendono vita. Scoprilo ora