💗 Episode 15 💗

2.3K 73 6
                                    


இவ்வாறு நாட்களும் ஓட, நம்முள் அழகிய நட்பும் உருவானதே.

நீ என்னை காணும் நேரமெல்லாம் என்னை அன்பாக கவனிப்பாய். "சாப்பிட்டாயா? குடித்தாயா?" என்று கேட்பாய். இல்லை என்று சொன்னால் என்னை இழுத்துக் கொண்டு சாப்பிட வைப்பாய். சில சமயம் உனது சேயாக மாறி ஒரு தாயின் அன்பை பெற மனம் எண்ணும் டி.

(அன்று இரவு ஆதி பசியில் முறுகிக் கொண்டதை கண்ட திவ்யா, சாப்பிட கொடுத்த போது கண்கள் கலங்க காரணமும் தெரிந்து போனது)

முதன்முறையாக நான் உன்னை வெளியில் சாப்பிட அழைத்தேன். நீயும் மறுபேச்சின்றி என்னுடன் வந்தாய். இருவரும் சாதாரண கடையில் பகல் உணவு உண்டுகொண்டிருக்கில், உன்னை கண்டு அதிசயித்து போனேன். ஏன் தெரியுமா? நீ இடது கையால் கரண்டியால் சாப்பிடுவதை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. வித்தியாசமாக அழகாகத்தான் இருந்தது. நான் சாப்பிடுவதை கூட நிறுத்தி உன்னை கண்களால் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

(திவ்யாவிற்கு அன்று ஆதியுடன் சென்று அவனின் கண்கள் கலங்க காரணத்தை அக்கணம் அறிந்து கொண்டாள். என்னைப் போலவே ரியாவும் இடது கையாலே உணவருந்துகிறாள் என்ற உண்மை)

வேறொரு நாள்,
உன்னுடன் சாலையில் நடந்து செல்கையில், ஐஸ் கிரீம் வேனை கண்டு நீ மகிழ்வடைய நான் உணர்ந்தேன் நீ ஒரு Icecream crazy girl என்று.
உனக்கு பிடித்த chocolate flavour இல் corn ஐஸ் ஒன்று தரவே, நீயும் இன்னொன்று வேண்டும் என்றதோடு, எனக்கும் ஏதும் வாங்க கூற, நானும் strawberry flavour ஐஸ் வாங்கினேன்.
இரு கைகளிலும் இரு ஐஸ்கிரீம்களை வைத்து மாறி மாறி நீ வடிய வடிய சாப்பிட்டதோ அது அழகோ அழகு டி. அக்கணம் உன்னில் ஒரு சின்னப்பிள்ளையை கண்டது போல் இருந்தது.
"என்னடி, இவ்வளவு வயதாகியும் ஒரு ஐஸ்கிரீம் கூட உனக்கு எப்படி சாப்பிடுவது எப்படி என்று தெரியாதா??" என்ற நான் கேட்க,
"தெரியும். ஆனால் இப்படி சாப்பிட்டால் தான் ருசி அதிகம். நீயும் try பண்ணி பாரேன்" என்று நக்கலுடன் கூற,
"அடுத்த தடவை try பண்றேன் டி, பாரு வடிய வடிய சாப்பிடுவதை" என்று கையில் இருந்த கைக்குட்டையை உன் முகம் அருகே கொண்டுவர,
நீயும் மென்மையாக புன்முறுவல் பூக்க, நானும் உதடோரம் வடிந்து இருந்த ஐஸ்கிரீம்களை துடைப்பதோடு என்னையும் உன்னில் தொலைத்து கொண்டிருந்தேன்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now