💗 Episode 35 💗

2.1K 67 34
                                    


திருமணமும் முடிய, வந்தோரின் வயிறுகளும் மனமும் நிறைந்தது. இறுதியாக ரவியும் திவ்யாவும் அவர்கள் இருவரின் குடும்பத்தவர்களும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போது நடந்தவைகள் அனைத்தும் தெரிந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் வேண்டுமென்றே ஜோடியை பார்த்து,
"இதென்ன இப்படி இருவர்களும் தனித்தனியாக சாப்பிடுகிறீர்கள்? ஊட்டிவிடவில்லையா? திவ்யா வெட்கப்படாமல் ஊட்டிவிடுங்கள்" என்று அதற்ற, அவளின் முகம் போன போக்கையும் அவளின் தடுமாற்றத்தையும் கண்ட ரவி,
" இல்லடா. எனக்கு ஊட்டிவிடுதல் எலெலாம் பிடிக்காது. நான் அப்படி சாப்பிடுவதுமில்லை" என்று தன் மேல் பலியை போட்டு கொண்டான் ரவி.
ரவியின் வீட்டிற்கு சென்றபோது அவசரமாக வேலைக்கு செல்லவதாயின் தாயின் கையால் சாப்பிடுவதை திவ்யா காணாமலில்லை. ஆனால் இன்று அவன் தனக்காக சொன்ன பொய் அவளின் மனதை நெகிழ செய்தது.

ரியா ஏதோ யோசனையாகவே சாப்பிடாமல் இருக்கவே,
" என்னடி, ஏதும் பிரச்சினையா? ஏன் இப்படி இருக்கிறாய்?" என்று ஆதி கேட்க,
" ஒன்றுமில்லை" என்று உணவை பிசைந்து கொண்டிருக்க,
ஆதி ஒரு கவளத்தை எடுத்து ரியாவின் வாயை திறக்க செய்து ஊட்டிவிட்டான். மறுபேச்சின்றி அவளும் சாப்பிடவும் செய்தாள்.
"போதும்டா" என்று ரியா கூற, ஆதி கேட்காமல் வாயில் திணிக்க, மெதுவாக அவனின் விரல்களை கடித்து விட்டாள். எல்லார் முன்னிலையில் அலற முடியாமல்
" வாடி, உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன்" என்று காதருகில் கூற, மெல்லியதாக புன்னகைத்தாள் ரியா.

ரவியின் வீட்டினுள்ளே வலது காலை வைத்து உள்ளே வந்தாள் திவ்யா. சில புதிய வேலைப்பாடுகளும், நேற்று அடிக்கப்பட்ட நிறப்பூச்சுக்களும் அந்த வீட்டை அழகுப்படுத்தின.
குடும்பத்தினர், அயலவர்கள் திவ்யாவை சூழ்ந்து கதைத்து கொண்டிருக்க, களைப்பால் அவளின் முகம் வாட, நிலாவை அனுப்பி களைப்பாக இருந்தால் அறையில் ஓய்வெடுக்க பணித்தான் ரவி. கொஞ்ச நேரத்தில் சென்றுவிடுவார்களே. It's okay என்று கூறி அனுப்பி வைத்தாள் மணப்பெண்.
இதனை இரண்டு ஜோடி கண்கள் காண மறக்கவில்லை.
"எனக்கு என்றுமில்லாத சந்தோசமாக இன்று இருக்கிறது. ஆதியை விட ரவியே திவ்யாவிற்கு பொருத்தமானவன். இப்போது கூட பார்த்தாயா? ரவி திவ்யா மீது எவ்வளவு பாசமென்று?? திவ்யாவும் சீக்கிரமாக ரவியை புரிந்து கொள்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று திவ்யாவின் தந்தை கூற, தாயும் ஆமோதித்தார்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin