💗 Episode 17 💗

2.1K 66 16
                                    


நாட்கள் இனிதாக மலர,
இராப்பொழுதுகள் உன்னுடன் கதைத்தே அழகாக கழிந்தன. அத் தவிர்ந்த அழகிய சிறு சண்டைகளும், சீண்டல்களும், வாழ்க்கை பற்றிய நமது கலந்துரையாடலும் கூடவே .

அன்று சனிக்கிழமை என் அதிர்ஷ்டவசமோ இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ நீ அழைப்பு எடுத்தபோது நான் குளித்து கொண்டு இருந்தேன்.
அதிகநேரம் ரீங் ஆகுவதை கேட்ட என் தங்கை ஸ்வர்ணா screen இல்
R is calling என்று வரவே, யோசித்தபடி அவள் இருக்க,
நீ என்னுடைய டப்ப மொபைலிற்கு அழைப்பு கொடுக்க, இதுவரை அந்த மொபைலை தேடிக் கொண்டிருந்த ஸ்வர்ணாவிற்கு அது தொலைந்துவிட்டதாக கூறிய நான் அன்று வசமாக மாட்டிக் கொண்டேன்.
My love is calling என்று வரவே, அழைப்பை அவள் ஏற்றுக்கொள்ள,
"hello, என்னடா எவ்வளவு நேரம் உனக்கு call பண்ணுவது?? கும்பகர்ணன் மாதிரி தூங்குறாய் போல. சரி காலையிலே உன்னுடன் சண்டை போட விரும்பவில்லை
Good morning da and I love you.
Meet you at Bright restaurant in half hour.
என்னடா சத்தத்தை காணவில்லை??
Are you there?? " என்று நீ கத்த,
தூக்கத்தில் அழைப்புக்கு பதில் அளித்திருப்பதாக நீ எண்ணி பெரிதுபடுத்தவில்லை.
அழைப்பை துண்டித்து சென்று விட்டாள்
" உனக்கு இருக்கு சங்கு. செத்தாய் அண்ணா" என்றபடி.

தலையை துடைத்தபடி, கடிகாரமுள் 11 மணிக்கு இன்னும் 10 நிமிடங்களே. அவசரமாக ரெடி ஆகியபடி அறையில் இருந்து வரவே,

"அண்ணா, என்னையும் அப்படியே கூட்டிட்டு போய் டிராப் செய்து விடுங்கள்" என்று ஸ்வர்ணா கூற,
"சரி, எங்க போகனும்?? "என்று சுமாராக கேட்க,
" bright restaurant" என்று கூறியதும் எனக்கு கை கால் புரியவில்லை. அங்கு தானே ஏதோ பேச வேண்டும் என்று ரியா கூறினாள். சரி இவளை எப்படி சரி வீட்டில் நிறுத்த வேண்டும் என்று எண்ணி,
" ஏன் அங்கே போகிறாய்??"
" அபியின் birthday so celebrate பண்ண அங்க போகிறோம். உங்களுக்கு என்ன??"
"அது வந்து ஸ்வர்ணா, அங்க சாப்பாடெல்லாம் சரி clean இல்லை என்று கேள்விபட்டு இருக்கிறேன். வேறு ஏதாவது restaurant இற்கு போகலாமே. உன் மேல் உள்ள அக்கறையில் தான் சொல்றேன்"
" எனக்கு நல்லா விளங்குது. திடீர் அக்கறை எதற்கென்று?? நான் இன்று விடமாட்டேன்" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் ஸ்வர்ணா.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Wo Geschichten leben. Entdecke jetzt