குனிந்து பார்க்க..
ஏதோ ஒரு தடித்த புத்தகம். திறந்து பார்க்க வெளிச்சம் கண்ணை பறிக்க செய்தது.
கண்ணாடி ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.
திகதிகளுடன் கீழே சிறு குறிப்புகளும் எழுதப்பட்டு இருக்க, இது ஆதியின் அறையில் இருந்ததால் ஒருவேளை இது ஆதியின் டைரி ஆக இருக்கும் என்று உறுதி செய்தவள் அவனின் தனிப்பட்ட விஷயத்தை அவன் அனுமதி இன்றி வாசிக்க கூடாது என்று நினைத்தாலும் மனம் விட்டபாடில்லை.
அதனையும் எடுத்து கொண்டு வீட்டை சென்றடைய, திவ்யாவை கண்ட நிலா கத்த, பெற்றோர்களும் ஓடி வந்தனர்."கால் எல்லாம் இரத்தமாக இருக்கிறதே" என்று தாய் பதற,
"ஐயோ, ஒன்றும் இல்லைமா. ஸ்வர்ணாவை பார்க்க போனேன். கதவு திறந்து இருந்தது. ஹாலில் இருட்டாக இருக்க, கீழே இருந்த கண்ணாடித்துண்டை காணவில்லை. அதன் மேல் கால் வைத்து பட்டது. இப்போ ஓகே மா" என்று கூற,
"அப்படி எப்படி ஓகே?? வா வைத்தியசாலை போவோம்" என்று தந்தை கூறி, வீதியில் இருந்த ஆட்டோவை நிறுத்த,
" நிலா, கவனமாக இதை என் cupboard இல் வைத்துவிடு. முக்கியமான documents " என்று டைரியை கொடுத்து விட்டு, பெற்றோரின் பேச்சை தவறாமல் அவர்களுடன் சென்றாள்.ஒரு மணிநேரத்தில் மருந்து போட்டு கொண்டு வந்தனர். வீட்டுக்கு வந்த திவ்யா, "ஸ்வர்ணா, நீ எங்கே இருக்கிறாய்? எப்போது வீடு வருவாய்?? " என்று கேட்க,
" நானும் அம்மா அப்பாவும் பழைய வீட்டுக்கு அருகே உள்ள கமலா அக்கா வீட்டுக்கு வந்தோம். அவள் தங்கைக்கு இன்று நிச்சயதார்த்தம். நாளை காலை வந்துவிடுவோம். ஏன் ஏதும் பிரச்சினையா??" என்று கேட்க,
" இல்லை, ஒரு பிரச்சினையுமில்லை" என்று அழைப்பை துண்டித்தாள்.தாயிடம் ஆதி மட்டும் வீட்டில் இருப்பதாக கூறவே, திவ்யாவின் தந்தை ஆதியை இரவு உணவிற்கு அழைக்க சென்றார்.
அங்கே, ஆதி கண் விழித்து பார்க்க, இன்று ஓவரா குடித்துவிட்டேன் போல தலையும்வலி என்று ஏதோ யோசனையுடன் சுற்று முற்றும் பார்க்க, என்ன நடந்துவிட்டது?? நான் எப்படி இங்கே வந்தேன்?? என்ற பலத்த யோசனையுடன் சமையலறைக்கு செல்லவே, குப்பைதொட்டியில் கண்ணாடித்துண்டுகள் காணவே, தான் கவலையில் உடைத்தவை ஞாபகத்திற்கு வந்தது. கை சைன் ஒன்றும் அறுபட்ட நிலையில் இருக்கவே, திவ்யாவின் என்று நினைவு வரவே, அவள் தான் அனைத்தையும் சுத்தப்படுத்தி இருப்பாள். அவளை கண்டாளே என்னவளையே நினைவுக்கு வர சிலவேளை கட்டுப்பாடின்றி நான் செயற்படுவேன். குடிபோதையில் ஏதும் நான் உளறி இருப்பேனோ?? என்று யோசிக்கையில் கதவு தட்டப்பட்டது.
ESTÁS LEYENDO
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...