ரியா வீட்டு மாடிப்படியில் ஏறும்போது,
"Riya, i want to talk to you" என்று தந்தை கூற,
"what dad??" என்று கேட்க,
"I said come here" என்று கூறும்போது ரியாவின் தாயும் சத்தத்தை கேட்டு வந்து சேர்ந்தார்.ரியாவும் தந்தையின் அருகே வர,
"who is this guy??" என்று புகைப்படமொன்றை காட்ட, ரியாவின் முகமோ பயத்தால் வெளிறிப்போனது. ஆதியும் ரியாவும் shopping செய்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது.
"friend" என்று ஒற்றை சொல்லால் பதிலளிக்க,
"boy friend?? Or just friend??" என்று இன்னொரு புகைப்படத்தை காட்ட, ஆதியின் தோளில் சாய்ந்தபடி ரியா இருக்கும்போது எடுக்கப்பட்டது.
"he is my boy friend" என்று இனிமேலும் மறைக்காமல் கூற,
"what??" என்று அனல் பறக்கும் பார்வையால் தந்தை கேட்க,
" நானும் அவனும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறோம் dad" என்று கூறியது தாமதம்,
கன்னத்தில் மாறி மாறி பளார் என்று அறையப்பட்டது. தாயின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது."உன் செல்லத்தால் தான் இவள் இவ்வளவு நாசமாகி இருக்கிறாள்" என்று கர்ச்சிக்க,
"எங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை நீ மட்டும் தான். உனக்கு நாம் ஓவரா freedom கொடுத்துவிட்டோம். அதான் இன்று எவனோடுயோ சுற்றி அடித்துவிட்டு லேட்டாக வருகிறாயா? நான் பேசாமல் இருந்தால் என்ன வேண்டும் பண்ணுவியா?? " என்று சத்தமாக கேட்க,
" அப்பா, நான் ஆதியுடன் மட்டும் தான் சுற்றினேன். ஏன் என்றால் அவன் எனது soulmate என்று உறுதி செய்துவிட்டேன்" ரியா கூற,
கோபத்தில் உச்ச கட்டத்திற்கு சென்றார் ரியாவின் தந்தை." how dare you?? யார் கிட்ட பேசுகிறாய் என்று தெரிந்து தான் நீ பேசுகிறாயா? நான் உன் அப்பா என்றதை மறந்து விட்டாயா?? நான் அவனை பற்றி முழுமையாக அறிந்துவிட்டேன். அவன் உன் பின்னாடி ஏன் சுத்துகிறான் என்று தெரியுமா?? எம் பணத்திற்காக. இந்த ஏழைப் பசங்கள் லவ் என்று பணக்கார பொண்ணுகளின் பின்னால் அலைந்து திரிந்து அவர்களின் பணத்தேவைகளை நிறைவு செய்வர். அவனும் அப்படியாமே. உன் கூட shopping போறது Park போறது. இதெல்லாம் இன்றையோடு நிப்பாட்டு" என்றபடி வாய்க்கு வந்த மாதிரி ஆதிக்கு திட்டவே,
ரியா கோபத்தில் தாய் கொடுத்த குளிர்பான glass ஐ கீழே தூக்கி எறிந்து,
" இல்லை. ஆதி அப்படி பட்டவன் இல்லை அப்பா. யாரு என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். உங்களுடைய விருப்பம் இல்லாவிட்டாலும் நான் அவனை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன்" என்றபடி மாடி ஏறி போனாள் ரியா.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...