💗 Episode 30 💗

1.9K 65 65
                                    


நடுநிசியில் அனைவரும் பிறந்தநாளை கொண்டாடினர். திவ்யா தூங்க போகும்போது
" நிலா, உனக்கு பிறந்தநாள்கள் பொதுவாக நினைவில் இருக்காதே. இன்று என்ன ஒரு ஆச்சரியம்??" என்று கிண்டலாக கேட்க,
"ரவி அத்தான் தான் நினைவு காட்டினாரு. மறந்துபோவேன் என்று 12 மணிக்கும் call. நேற்றிரவு தான் கேட்டாரு நாளை என்ன நாள் என்று?? நான் புதன்கிழமை என்றேன். எனக்கு திட்டிவிட்டு, எப்போதும் செய்வது போல் கேக் வெட்ட சொல்ல, அந்த இரவு கேக் எங்கே வாங்க?? என்று கேட்க, உடனே தெரிந்த யாருக்கோ அழைப்பு விடுத்து கேக் ஆடர் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். " என்று கூற, திவ்யாவிற்கு கண்கலங்கியது.
" அவர் ஏன் வரவில்லை?? எல்லா பிறந்தநாளுக்கும் வந்து சர்ப்ரைஸ் பண்ணுவாரே" என்று கவலையாக கூற,
" அவருக்கும் வர ஆசை தான். அம்மா அப்பாவும் அழைத்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். திவ்யாவின் திருமணத்திற்கு இன்னும் 1கிழமையும் இல்லையே. நான் அங்கு வந்தால் திவ்யாவின் பெயருக்கு ஏதும் கேடு வரும் என்று பயம். " என்றவுடன் திவ்யாவிற்கு பேச பேச்சு வரவில்லை. சிறுவயதில் சிவப்பு ரோஜா என்றால் திவ்யாவிற்கு பிடிக்கும் என்பதால் அதனை பறித்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவான்.
பிறகு ரவி தனக்கு பிடித்தமான விளையாட்டு பொருளை திவ்யாவின் பிறந்த நாளன்று பரிசளிப்பான். காலப்போக்கில் உண்டியலில் சேமித்த வைத்த காசிற்கு பெண்கள் அணியும் தோடுகள், மாலை, கொலுசு என்று வாங்கி கொடுப்பான்.
கடை உரிமையாளரான பின் கடந்த 3 வருடங்களாக விலை உயர்ந்த அழகான சுடிதாரும், பிரபலமான ஹோட்டலில் இருந்து கேக் ஆடர் செய்து பிறந்தநாளை அசத்துவான்.
அன்றைய நாட்களில் தொலைபேசியை switch off செய்து குடும்பத்துடன் படம் பார்க்க, எங்கும் செல்வது வழக்கம். உற்ற நண்பன் நிமல் தேவைக்கு அழைப்பு அழைத்து செயலிழந்ததால் கடுப்பாகி ரவியின் வீட்டுக்கு வந்து ஏசியும் திவ்யாவின் நினைவுக்கு வந்தது.

இவ்வளவு என் மீது இரக்கம் கொண்ட ரவியை பற்றி ஏன் நான் தப்பாக நினைத்தேன் என்று மனம் நொந்துகொண்டாள் அவள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Donde viven las historias. Descúbrelo ahora