💗 Episode 29 💗

1.8K 62 58
                                    


தொலைபேசி அலர காதில் வைத்தாள் திவ்யா.
"ஹாய் அண்ணி, என்னை நினைவு இருக்கிறதா??" என்று கோபத்துடன் கேட்க,
"உன்னை மறப்பேனா ஸ்வர்ணா?? சரி திருமண ஏற்பாடெல்லாம் எப்படி போகுது??"
" ஷாப்பிங் கொஞ்சம் போகனும். Beauty பாலர் போகனும். உங்க கூட தான் அண்ணி போகனும். அண்ணனிடம் நான் சொல்லி லீவ் போட்டு விடுகிறேன். Will you come?? " என்று உரிமையுடன் சொல்ல,
அவளும் "சரிமா. நான் வருகிறேன்" என்று கூற,
"என் திருமணத்திற்கு இன்னும் 4 நாட்கள் தானே இருக்கு. வீட்டுக்கு வர வேண்டும் என்று கூட தோன்றவில்லையா அண்ணி?? திருமணத்திற்கு பின் நான் கணவனின் வீட்டில் தானே இருப்பேன். இனி எப்படி உங்களை சந்திப்பேன்? " என்று கவலையாக கூற,
"திருமணத்திற்கு முன் கணவன் வீட்டுக்கு போதெல்லாம் நல்லதல்ல. காண்போர் ஏதும் சொல்வார்கள் என்று என் பெற்றோருக்கு பயம். அதுதான் வரவில்லை கண்ணா. இல்லாவிட்டால் உன்னுடன் காலத்தை செலவழிக்க எனக்கு விருப்பம் இல்லாமல் போகுமா? "
" ஐயோ, இதெல்லாம் ஒரு காரணமா? அதெல்லாம் பழைய ஆட்களின் பழைய கருத்து. Now we are new generation. என் நண்பியாக சரி வாடி." என்று சொல்ல, திவ்யாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
" நாளைக்கு வருகிறேனே, நேரம், இடத்தை பார்த்து சொல்லுடி " என்று கூற,
நன்றி கூறிய ஸ்வர்ணா அழைப்பை அணைத்தாள்.

மதியுடன் சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தும்போது,
" என்னடி, dull ஆக இருக்கிறாய்? "
" ஒன்றுமில்லையடி" என்றாலும் திவ்யாவின் கண்கள் கலங்குவதை காண துடி துடித்து போனாள் மதி.
" சொல்லுடி, ஆதி ஏதும் சொன்னனா?" என்று கேட்க,
" இன்று மேசையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு தூக்கம் வந்து, அப்படியே தூங்கிவிட்டேன். எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் போல் கனவு கண்டேன்."
" எவ்வளவு நல்ல கனவு? அதற்கு போய் அழுகிறாயா?"
" கண் திறக்கும் போது ஆதி நின்று இருந்தான். பகல் கனவு பலிக்காது என்று கூறினான்டி" என்று கண்ணீர் வடிய,
" டி, லூசா உனக்கு?? ஆதிக்கு நீ என்ன கனவு கண்டாய் என்று தெரியாமல் அவன் சும்மா சொல்லி இருப்பான். நீ வேற. ஏன்டி negative ஆக யோசிக்கிறாய்?? "
" முன்பு போல் அவன் என்னுடன் பேசுவதில்லை. Busy busy என்று கூறுகிறான். தனது வருங்கால துணைக்கு ஒரு நாளைக்கு 5நிமிடாவது செலவழிக்க முடியாதா? எனக்கு பயமாக இருக்குடி. ஒரு வேளை வீட்டு கட்டாயத்தின் பேரில் தின் என்னை திருமணம் செய்ய போகிறானோ? " என்று புலம்ப,
" என்னடி இது?? உனக்கு பைத்தியமா? இன்னும் கல்யாணத்திற்கு 2 கிழமை தான் இருக்கு. ஆதியின் தங்கையின் கல்யாணம் வேற. அவன் பிசியாக தானே இருப்பான். லூசுத்தனமாக யோசிக்காதே. கல்யாணத்திற்கு முன் அவன் சுதந்திரமாக இருக்கட்டுமே." என்று மதியின் உதடுகள் கூறினாலும்,
ஆதியின் நடவடிக்கை திவ்யாவிடம், கொஞ்சம் யோசிக்க தான் வைத்தது.
" கடவுகளே, அவளின் மனதிற்கு ஏற்றவனை சேர்த்துவிடு. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் கலங்க வைத்துவிடாதே" என்று வேண்டிக்கொண்டாள் மதி.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) حيث تعيش القصص. اكتشف الآن