அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும்,
அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்?
என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019
#3 வலி...
ரவியின் அணைப்பில் தூங்கி இருந்த நிஷாவை திவ்யா எழுப்ப, "மம்மி, கொஞ்சம் விடுங்களே. 5 மின் ல எழும்புறேன் மா" என்று தந்தை இறுக அணைத்துக்கொண்டு மீண்டும் தூங்கலானாள் நிஷா.
" நிஷா, concert க்கு இன்னும் 2 நாட்கள் இருக்கு. நீ அவசரமா ரெடி ஆகாவிட்டால் அஷ்வின் கூட ராதா பாட்னரா டான்ஸ் ஆடட்டுமே" என்று கூற, நிஷா பாய்ந்து எழுந்து குளியறைக்குள் புகுந்தாள்.
" என்னங்க, எழும்புங்களே. நிஷாவே எழுந்துவிட்டாள்" என்று எழுப்ப, ரவியின் இழுவை தாங்காமல் அவனின் மேல் விழ, அவளின் முகத்தில் விழுந்த கூந்தலை பின்னோக்கி செருகி விட்டு, கன்னத்தில் முத்தமிட, " இப்போ, நிஷா வந்து விடுவா. விடுங்களே" என்று சிணுங்கிக் கொண்டு இருக்க குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, மெதுவாக அவளை விடுவித்தான் ரவி.
மகளை ரெடி செய்து வெளியே அனுப்பிவிட்டு, சாரியை சரிசெய்து கொண்டு இருக்க, பின்னால் வந்து ரவி அணைக்க, " ரவி, 4 வயது பிள்ளையின் தாய் நான் என்று மறந்துவிடாதீங்க" என்று நக்கலடிக்க, " எவ்வளவு வயதானாலும் என் மனைவி இன்னும் அழகா தானே இருக்கா" என்று அவளுடன் கொஞ்சிவிட்டு வெளியேறினான் ரவி.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.