💗 Episode 23 💗

2K 65 16
                                    


"சொல்லுங்க அத்தை, என்ன விஷயம்?" என்று ரவி கேட்க,
ஒரு கணம் திகைத்தார்.
"அது வந்து.." என்று திணறும்போது,
"என்ன அத்தை?? எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தயங்காமல் சொல்லுங்கள்" என,
மனதை ஒருமித்துக் கொண்டு,
"ரவி, என்னை மன்னித்துவிடு. திவ்யாவிற்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் வைத்து இருக்கிறோம்." என்று கூறுவது தாமதம்,
சில மன்னிப்புகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாமல் மனம் பதைக்க,  மௌனம் நிலவ, இதயம் இரண்டாக பிளந்த சத்தம் அத்தைக்கு கேட்கவில்லை. கண்களும் கலங்க, இனி அவள் எனக்கு சொந்தமில்லா பொருள் என்று மனம் ஏற்க மறுத்தது.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு
எப்போது? எங்கே? என்று தாய் வருமுன் தொலைபேசியை அணைத்தான்.

"ரவி, ரவி" என்று தாய் அழைப்பதும் கேட்காமல்,
தனது கனவுலகில் அனாதையாய் நின்றுகொண்டிருந்தான். ஆசைகள் அனைத்தும் கானல் நீராக மாற, பழைய நினைவுகள் அலை மோதின.
சிறுவயது முதல் இன்று வரை அவளுடன் வாழ்ந்த வசந்த காலம் பற்றி எண்ணுகையில் கண்களில் இருந்து மழை பொழிந்தது.
அவனது சொந்த கடை முதலில் சிறு பொட்டிக்கடையாகவே இருந்தது. அதில் புதிய அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் சுடிதார்களை கண்டால் தன் கையில் காசு இல்லாவிட்டாலும் திவ்யாவிற்கு வாங்கி வைப்பான். திருமணத்திற்கு என்று காசுகள் சேமித்து நகைகள் செய்ய தொடங்கினான்.
கடை நன்கு பிரபலமானதும் அவள் முன்பு தன் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று கனவை ரவியிடம் கூறியபோது தன் இதயத்தில் செதுக்கி வைத்து அதேபோல் இன்று திட்டமிட்டு, வீடு கட்டிக் கொண்டு வந்தான் ரவி அவனின் அருமை மனையாளுக்கு. இவனின் காதலை அறியாத அவள் நிச்சயதார்த்தத்திற்கு தன் ஆசை காதலனுடன் சேரும் அந்நாளை எண்ணிக் கொண்டு இருந்தாள்.

"டேய் ரவி" என்று தாய் அவனை குலுக்க,
"சொல்லுங்க அம்மா" என்று திக்கியபடி சொல்ல,
"எவ்வளவு நேரம் உன்னை பேசுகிறேன்??? அடுப்பில் கறி வைத்து இருக்கிறேன். அதை அணைக்க அழைத்தல் இங்கே நீ சிலை போல் நின்று கொண்டிருக்கிறாய்." என்று கூற,
ரவியின் கண்களில் இருந்து சில முத்துக்கள் சிதற,
"டேய், என்னடா??? என்ன நடந்தது?? சொல்லுடா" என்று கேட்க,
தாயின் மடியில் விழுந்து அழுதான்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now