அதிகாலை சேவல் கூவ, நகரத்தில் கேட்க முடியாத இராகங்களுடன் பறவைகளும் கீச்சிட, புத்துயிருடன் மெதுவாக தன் கண்களை திறந்தாள் திவ்யா. திவ்யா உறங்கி கொண்டிருப்பதால் சேர்ட்டை போட்டு கொண்டு இருக்கும் தருணத்தை திவ்யாவின் கண் தவறி பார்க்க, ரவியின் வலிமையான மென்மையான புஜங்களில் சிவப்பு கீறல் போன்ற அடையாளங்கள் காணப்பட்டன. கண்களை மூடிக்கொண்ட திவ்யாவிற்கு நேற்று ரவி பாயிலே படுத்திருந்ததால் அந்த அடையாளங்கள் படிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு, ஓர் முடிவினையும் எடுத்துக்கொண்டு எழவே,
"ஹாய் good morning, திவ்யா"
" ஹாய், good morning" என்று சோம்பலிட,
" நேற்று தூக்கம் போனதா? புதிய இடமல்லவா?"
" ஆம். களைப்பிற்கும் சேர்த்து தூக்கம் நன்றாக போனது. காபி குடித்தீர்களா? சாரி, இன்று எழும்ப கொஞ்சம் லேட் ஆகி விட்டது" என்று தன்னை நொந்துக்கொள்ள,
"ஐயோ, திவ்யா உனக்கு பிடித்த நேரத்தில் எழும்பு, தூங்குமா. இங்கு யாரும் உன்னை ஏச மாட்டார்கள். சரியா? இரு, நான் போய் காபி எடுத்து வருகிறேன்" என்று சமையலறையை நோக்கி சென்றான்." திவ்யா, ஏதும் தேவையா? " என்று குளியலறையை தட்ட, பல் துலக்கி கொண்டு இருந்தவள்,
" இல்லை. ரவி, நான் குளிக்கவேண்டும்" என்று கூற,
" கொஞ்சம் குளிராக இன்று இருக்கின்றது என்றமையால் உனக்காக தண்ணீர் கொதிக்க வைத்தேன். 10 நிமிடம் பொறுத்திரு" என சொல்ல, ரவியின் காதலை படிப்படியாக அனுபவிக்கலானாள்.
உனக்கு சௌகரியமான ஆடையை அணி திவ்யா. கட்டாயம் சாரி கட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டளைகள் இல்லை. என்று அவளின் விருப்பப்படி அணிய சொன்னாலும், தன் தாயின் கட்டளைப்படி சாரியே அணிந்தாள். காபி கொடுக்க வந்தபோது ரவி சற்று தடமாறத்தான் செய்தான். முதன்முதலில் தன் மனைவியாக சாரியில் அருகிலே பார்ப்பது அவனுக்கு முதல் தடவையல்லவா?
அறையில் இருந்து வெளியே வந்த திவ்யா, சாமியறைக்கு சென்று கும்பிட்டு விட்டு, ஹாலில் உள்ள பத்திரிகையை பார்க்கலானாள்.
" திவ்யா, சோம்பல் என்றால் டிவி பாரு." என்று கணவன் சொல்லிவிட்டு தன் நண்பனை காண சென்றான்.
" காலைச் சாப்பாடு ரெடி" என்று ரவியின் தாய் கூற, எழுந்து கை கழுவி,
"அத்தை நீங்களும் வாங்களே. ரவி சாப்பிட்டாரா?" என்ற கரிசனையுடன் கேட்க,
" எனக்கு பசியில்லை. ரவி வந்து சாப்பிடுவான்" என்று கூறி செல்லவே தன் மேல் இருந்த கோபம் இன்னும் அத்தைக்கு குறையவில்லை என்று மட்டும் தெரிந்தது.
கஷ்டப்பட்டு உணவை திணித்தாள் திவ்யா.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...