வீட்டை அடைந்த ரியாவிற்கு பெற்றோரின் கவனிப்பு வித்தியாசமாக இருந்தது. "ரியா, மாலாவிற்கு என்னமோ குடும்ப பிரச்சினை என்று லீவ் கேட்க, நீ அந்த guest வீட்டில் தனியாக இருப்பது நல்லமில்லையே என்பதால் தான் உன்னை எங்களுக்கு சுகவீனம் என்று அழைத்தேன். இந்த உண்மையான காரணத்தை கூறினால் நீ ஒருபோதும் வர மாட்டாய் என்று நாம் அறிவோம்" என்று தாய் கூற,
சொல்வதெல்லாம் பொய் என்று புரிய வெகுநேரம் தேவைப்படவில்லை. எரிச்சலுடன் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றாள் ரியா.ஓரிரு நாட்களுக்கு பின்,
பெற்றோரிடம் மெதுவாக தன்மையாக தன் கடந்த காலத்தை கேட்டும் ரியாவிற்கு பயன் ஏற்படவில்லை.
சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியின் பட்டியலை திரட்டி, கடந்த 5 வருடங்களில் படித்த மாணவர்களின் பெயர்பட்டியலை நண்பி மூலமாக பெற ஏற்பாடு செய்தாள்.
"என் அறையில் ஏதாவது க்ளூ இல்லாமல் போகாதே" என்று மனம் கூற, எல்லா cupboard களையும் இழுத்துபோட்டு தேடியும் தோல்வியிலே முடிந்தது. அனிதாவை மீட் பண்ண பேசினால் எல்லாம் clear ஆகுமே. ஆனால் என்னை வீட்டில் சிறை கைதியாக என் பெற்றோர் வைத்து இருக்கிறார்களே. வேலைக்கார பெண்மணிகளுக்கும் வேலைப்பளு அதிகம் என்பதால் அவர்களை அழைத்து செல்லவும் முடியாதே. ஏன் இந்த கொடுமை கடவுளே என்று மனம் வாட, அவளை தூக்கமும் தழுவிக்கொண்டது.அன்று வயதான பெண்மணி மகளின் கல்யாணம். ஏதும் துணிகள் இருந்தால் தாம்மா என்று தோட்டத்தில் எதையோ யோசித்துக்கொண்டிருந்த ரியாவின் காதுகளுக்கு கேட்டது. தோட்டத்தில் வேலை செய்த வேலையாட்கள் போ என்று துரத்த முற்படும்போது ரியா தடுத்து,
"கொஞ்சம் இரு மா. கொண்டு வந்து தருகிறேன்" என்று அறைக்குள் சென்று நல்ல சுடிதார்களை எடுத்து கொண்டு புறப்பட முற்படும்போது, நீல நிற சுடிதாரின் முந்தானையில் சிக்கி இருந்த ஏதோ ஒரு காகிதம் விழ கண்டாள். அதை கண்டு கண்கள் ஆச்சரியத்தீல் விரிந்தன.
அதை எடுத்து பத்திரமாக லாச்சில் இட்டு, அப்பெண்மணியினை கடவுள் தான் அனுப்பி இருக்கிறார் என்ற சந்தோசத்தால் ஓரிரு காசு நோட்டுகளையும் கையில் வைத்து பொத்த, கண்ணீருடன் வாங்கி கொண்டார்.
STAI LEGGENDO
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Storie d'amoreஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...