திவ்யாவின் அறிமுகம் 💕

7.8K 129 2
                                    


உலகிற்கு ஒளி தரும் சூரியன் மெதுவாக கிழக்கு வானிலிருந்து வெளியே வர, பறவைகள் தனது இரையை தேடி உற்சாகமாக பறந்து செல்ல, மொட்டுகளும் மெதுவாக விரியத் தொடங்கின. மொட்டு பூவாக விரிவதை பொறுமையில்லாமல் தேனீக்களும், வண்ணாத்துப் பூச்சிகளும் அவற்றை சுற்றி வந்துக் கொண்டு இருந்தது.

அலாரம் அடித்து கொண்டிருக்க, சோம்பலுடன் திவ்யா எழுந்து தனது கரங்களை நீட்டி சோம்பல் முறித்தபடி, "இவ்வளவு அவசரமாக விடிந்து விட்டதா?? இப்போ தான் தூங்கியது போல இருக்குதே." என்று தன்னுள் புலம்பியபடி,
யன்னலை திறக்க, அவளை கண்ட தோட்டத்தில் உள்ள பூக்கள் மெதுவாக அசைய, அவளுக்கு காலை வணக்கம் கூறுவது போல் இருந்தது. அவளது இதழ் புன்முறுவல் கொள்ள,

யன்னல் திறந்தும் இவ்வளவு வெளிச்சத்திலும் தூங்குகிறாள் பாரு என்றபடி, தனது அருமை தங்கை நிலாவை எழுப்பினாள்.

" அக்கா, ப்லீஸ் 5மின்ஸ் தூங்கி எழும்புகிறேன், நீ வொஷ் எடுத்து வருவதற்குள் எழுந்து விடுகிறேன். கொஞ்சம் தூங்க விடேன் ப்லீஸ்" என்று கெஞ்சலுடன் கூற, சரி பாவம், கொஞ்சம் தூங்கி எழும்பட்டும் என்று நல்ல மனதோடு,
குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தாள் திவ்யா.

சற்று நேரத்தில்,
"திவ்யா, நிலா இன்னும் எழும்பல்லையா?" என்ற தாயின் குரல் கேட்க, குளியலறையிலிருந்து வந்த திவ்யாவின் செல்ல அடிகள் தன் தங்கையின் மேல் விழ, புலம்பியபடி எழுந்தாள் நிலா.

அதிகாலையில் குளித்துவிட்டு, முடியை டவலால் சுற்றி கொண்டு, வேலைக்கு செல்ல ஐயன் செய்த சுடிதார்களில் எந்த சுடிதாரை தேர்வு செய்து செய்வோம் என்று யோசித்தாள் அவள். அவளுக்கு காலைல சுடிதார் செலக் பண்றது தான் கஷ்டமான வேலையும் கூடவே. சரி இன்னைக்கு இந்த நீலநிற சல்வார் உடுக்கலாம் என்று ஐந்து ஆறு நிமிடங்களுக்கு பின் தேர்ந்தெடுத்து அணிந்து கண்ணாடியின் முன் நின்றாள் திவ்யா.

ஓரளவான உயரம், அளவான உடம்பு, வட்டமான முகம், அழகாக வரையப்பட்டது போன்ற கண் புருவங்கள், பார்த்தவர்களை இன்னொரு தடவை பார்க்க வைக்கும் அவளது கயல் போன்ற விழிகள், அழகாக செதுக்கப்பட்ட மூக்கு, சிவப்பு நிறமான இதழ், கண்ணாடியை போன்ற அவளது வெண்மையான கழுத்து. நெற்றியில் பொட்டை சரியாக வைத்தபடி, தாயை தேடி சமையலறைக்கு விரைந்தாள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Kde žijí příběhy. Začni objevovat