மனம் நிம்மதி அடைய தொலைபேசியையும் அணைத்துவிட்டு சென்னை புகையிரதத்தில் யன்னலோரத்தில் வெளியே பார்வையை வீசினான் ஆதி.
இன்று ரியாவின் பிறந்தநாள் அல்லவா? உன் நினைவில் இன்றைய நாள் முழுவதையும் செலவழிக்கவே இங்கு வந்தேனடி என்றது மனது.அவளின் கடைசி பிறந்தநாளை பற்றி நினைவு கூறலானான்..
கல்லூரியில் ஆதியின் தலைமையால் tour ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் இரண்டு நாட்கள். அவன் ரியாவின் பிறந்தநாளையும் அதற்கு முன்னுள்ள நாளையும் தெரிவு செய்தான். சுற்றுலாவில் அன்று அவனின் திட்டப்படி எல்லாரும் சந்தோசமாக களித்துவிட்டு கடலோர ஹோட்டலில் தூங்க சென்றனர்.
11.30 இற்கு ரியாவின் தொலைபேசி அலர,
" ரியா, உனக்கு உடனே வரமுடியுமா? "
" ஏன் ஆதி, என்ன நடந்துவிட்டது?" என்று பதற,
" கடற்கரையில் தனியாக உலாவிக்கொண்டிருந்தேன். என்னமோ என் காலை கடித்துவிட்டது போல, இரத்தம் நிறைய வருதுடி. வரும்போது ஐஸ் cubes கொண்டு வா" என்று கூற,
5 நிமிடத்தில் அவன் சொன்ன இடத்தில் வந்து நின்றாள் ரியா, கண்கள் கலங்க, கவலையுடன்." எங்கேடா??" என்று கேட்க,
"சும்மா சொன்னேன்டி. பயந்துவிட்டாயா? " என கூற,
ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.
" உனக்கு லூசா? இந்த இரவில் அழைப்பு விடுத்து இப்படி சொன்னால்? நான் எவ்வளவு பயந்தேன் டா. உனக்கு எல்லாமே joke. Feelings உடன் விளையாடாதே. உனக்கு ஏதும் ஆகி இருந்தால் என்னால் தாங்கி கொள்ளமுடியுமா? " என்று கலங்க,
" sorry டி, நான் அவ்வளவு யோசிக்கவில்லை. உன்னை இங்கு அழைக்க வேறு வழி கிடைக்கவில்லை. இந்த இரவு நிலா வெளிச்சத்தில் உன் கை கோர்த்து கடல் மண்ணில் நடக்க ஆசை இருக்காதாடி? கூப்பிட்டால் ஏதாவது காரணம் சொல்லி வராமல் விடுவாய். அதான் இப்படி செய்தேன். தங்கமே அழாதேடி" என்று அவளின் கண்களில் உதிரும் முத்துக்களை கரங்களில் சிறை செய்தான்.
மெதுவாக தென்றலும் வீச, அவளின் கூந்தலும் மெதுவாக பறக்க,
காதின் ஓரம் அவற்றை விடுத்து,
" என்னடி இன்னும் கோபமா? என்ன தண்டனை வேண்டுமானாலும் தா டி. அதற்கு முன் படகில் ஒரு ரவுண்ட் போகலாமே? " என்று கேட்க,
ரியா முளித்தாள் "நான் வாழவேண்டிய வயதுடா. உனக்கு படகோட்டவே தெரியாது. எனக்கு வரமுடியாது தாயே" என்று நகைச்சுவையாக கூற,
" அப்போ என்னை தனியாக செல்ல சொல்கிறாயா? சரி எனக்கு ஏதும் ஆகினால் யாரு கவலைப்பட இருக்கிறார்கள்? " என்று பரிதாபமாக நடிக்க,
கன்னம் இரண்டிலும் பளாரென்று விழுந்தது.
"இனி இப்படி பேசினால் கொன்றுவிடுவேன் டா. உனக்கென்ன படகில் வரவேண்டும் அவ்வளவு தானே? அதற்கு ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய்? உனக்கு படகோட்ட தெரியாவிட்டால் பரவாயில்லை. இரண்டு பேருமே சுவர்க்கலோகத்துக்கு சேர்ந்து செல்வோம். என்னை விட்டு ஒரு நிமிடம் கூட விட்டு செல்ல எண்ணிவிடாதே" என்று எச்சரித்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட படகில் சென்று அமர, ஆதியும் வரவே, படகும் நகர்ந்தது.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...