அன்று நானும் உன்னுடன் நீ வாழும் உலகிற்கு வர தயாராகினேன். டாக்டர் தந்த மாத்திரைகளுக்கு கூடுதலாக மாத்திரைகளை சாப்பிட்டேன். ஆனால் எவ்வாறோ என்னை டாக்டர் காப்பாற்றிவிட்டார். என்னை மயங்கிய நிலையில் கண்ட என் அம்மாவிற்கு heart attack வந்து எனது வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார். கண் திறந்ததும் உன்னையே என் மனம் நினைத்து, உன் பெயரையே உச்சரித்து கொண்டு இருந்தது. ஸ்வர்ணாவிடம் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தேன். ஆனாலும் என் மனம் அடங்கவில்லை. என் உற்ற நண்பன் விவேகும் என்னை சமாதானப்படுத்த முயன்றும் அவனாலும் முடியவில்லை. மீண்டும் தற்கொலை செய்ய துணிந்தேன். என் கன்னத்தில் பளார் என்று கன்னத்தில் அறைந்து,
"உனக்கு பைத்தியம் பிடித்தாடா?? உன் அம்மா எங்கு இருக்கிறார் என்று தெரியுமா?? அவ ஐசியுல இருக்கிறாடா. உனக்கு என்னதோ என்று துடித்து போய்ட்டா. கடைசியில் நெஞ்சில் கை வைத்து சரிந்தார். உன் தங்கை, உன் அப்பாவை நீ இல்லாம வேறு யாரு அவர்களை பார்த்து கொள்வார்கள்? ஓர் உயிர் அங்கே போராடிக்கு கொண்டிருக்கு. நீ இங்க சாகனும் என்று போராடிகிறாய். யோசித்து செய்வதை செய். " என்று நண்பன் கூற, ஐசியுவை நோக்கி ஓடினேன்.
கால்கள் பலமற்று ஓட முடியாமல் பல இடங்களில் சறுக்கினேன்.நீ என்னை விட்டு போய் விட்டாய். இப்போது என் தாய். ஏன் கடவுளே என்ன இப்படி சோதனைக்கு உள்ளாக்கிறாய்?? என்றபடி ஐசியு கண்ணாடியில் உள்ளே பார்க்க, கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. சிறு வயது முதல் தன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத தாயின் நினைவுகள் அலை பாய, கடவுளை எண்ணி கும்பிட்டேன். என் தாயிற்கு ஏதும் நடந்துவிட கூடாது என்று.
"அண்ணா, அம்மாவை பார்த்தாயா??? எங்களை விட்டு நீ போக பார்த்தாய். நல்லவேளை கடவுள் உன் உயிரை எடுக்க மறுத்துவிட்டார். அண்ணா உனக்கு எங்களை விட்டு போக எப்படி மனம் வந்தது?? உன் நிலையை பார்க்க முடியாமல் தாயிற்கும் இப்படி ஆகிற்று. எங்கள் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு சோதனை? அண்ணா, அம்மாவிற்கு ஒன்றும் ஆகாது தானே?? அண்ணா, எங்களை விட்டு மறுபடியும் போக மாட்டாய் தானே? எங்களை விட்டு சென்று உன்னால் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா??? " என்று என் நெஞ்சில் தேம்பி தேம்பி அழ, அவளை ஒருவாறு சமாதானம் செய்தேன்.
அம்மாவின் நிலையை கண்டு மனம் இடிந்து உட்கார்ந்து இருக்கும் தந்தையை பார்க்க, என் மனம் பதற தொடங்கியது.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...