அவள் முட்டி மோதியது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது தான்.
இந்த கார்ர எங்கையோ பார்த்து இருக்கேனே. ஆனா எங்கன்னு தான் நினைவு இல்ல. திவ்யா, கொஞ்சம் யோசி என்று மூளையை குடைந்து கொண்டு யோசித்தாள் திவ்யா."ஆம் இது அந்த அவ்டி கார் தானே.. கம்பனியில் இருந்து இரவு வரும்போது என்னை துரத்தி வரும் கார் இதுவல்லவா??
இது எப்படி இங்க??
இலக்க தகடை பார்த்தாள்.
ஆம் அதே இலக்கம். அப்போ என்ன துரத்தி வர்லயா??? ஆதி வீட்டுக்கு வந்தத தான் நான் என்ட பின்னால வர்ரதா கற்பன செஞ்சனா?? போதாதுக்கு கம்பளைன் பண்ணவும் பார்த்தேனே "
என்று குழப்பத்துடன் பார்த்து கொண்டிருக்கும் போது, "திவ்யா" என்றபடி ஸ்வர்ணா வந்து கொண்டு இருந்தாள்."இதை அம்மா உன்கிட்ட கொடுக்க சொன்னா" என்று சாப்பாடு பொதி ஒன்றை நீட்ட அவளும் வாங்கி கொண்டாள்.
"ஸ்வர்ணா, பெரிய நன்றி உன் அண்ணனிடம் இருந்து என்னை காப்பாற்றியமைக்கு"
என்று கூற,
"நீ மட்டுமில்ல எல்லாரும் அவரை அப்படி தான் சொல்வாங்க திவ்யா. ஆனா அவர் முன்னம் இப்படி இல்லை. அவரின் இருட்டு பக்கங்களுக்கு முன் அவர் செம ஃபன் டைப், எல்லாரையும் சிரிக்க வைத்தாரு. ஆனா இப்போ அவரை இனி சிரிக்கவிடாமல் பண்ணி விட்டார் அந்த கடவுள். " என்று கண்கலங்க சொன்னாள் ஸ்வர்ணா. கேட்டதும் ஒருமாதிரியாகி போனது திவ்யாவிற்கு. ஒத்தர வெளில பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டோமே. அவர பத்தி முழுசா தெரியாம" என்று மனம் சொல்ல,
" கடவுள் நம்பிக்கையை இழக்காதே ஸ்வர்ணா. அவர் மீண்டும் முன்பு போல் இருப்பாரு. அதெல்லாம் சரி, இந்த கார் யார்டது?? " என்ற பேச்சை மாற்றினாள் திவ்யா இன்னும் அவள் கண்கலங்காமல் இருக்க." என் அண்ணாட கார் தான். ஏன் திவ்யா?? "என்று கேட்க,
" போன கிழமை நான் வேலை முடிந்து வரும்போது என் பின்னால் இது தொடர்ந்து வர்ரத கண்டேன். நான் தான் தப்பாக புரிந்து கொண்டேன் போல. அது என்னை தொடரல்ல, ஆதி பாஸ் வீட்டுக்கு வர்ர என்று நான் அறியல்லையே" என்று ஈஈஈ என்று பல்லை காட்ட,
ESTÁS LEYENDO
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...