💗 Episode 20 💗

2.2K 73 6
                                    


"அது வந்து... ஆதியின் டயரியை.. நான்.. அன்று.." திக்கி திக்கி கூற,
"வா இங்கே" என்று ஸ்வர்ணா இழுத்து  balcony க்கு அழைத்து சென்று,
" திவ்யா, நான் உன்னிடம் கூற தான் இருந்தேன் என் அண்ணன் காதல் கதையை பற்றி. ரியாவை உயிருக்கு உயிராய் என் அண்ணா காதலித்தார். ரியா அக்காவும் என் அண்ணனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவராக இருந்தார்.  ஆனால் விதியோ அவர்களின் வாழ்க்கையில் விளையாடியது. சற்றும் எதிர்ப்பார்க்காத விளைவால் இருவரும் பிரிந்தனர்.

எந்நேரமும் ஊரில் இருக்கும்போது எதையோ பறிக்கொடுத்ததுபோல் இருப்பார். மாதங்களும் கடந்தன. ஆனால் அண்ணாவின் மனநிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. தொழில் இடமாற்றத்தை ஏற்படுத்தி ஒருவாறு அண்ணனையும் சமாதானப்படுத்தி இங்கே அழைத்து வந்தோம். புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய இடம் இவை அனைத்தும் ஆதி அண்ணாவை மாற்றும் என நம்பினோம். அதே போல் அவரும் இப்போது பழைய நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக திரும்பிகிறார். எங்கள் எல்லோரும் முன்னிலையில் சந்தோசமாக இருப்பதாக நடிக்கிறார் ஆனாலும் அவர் உண்மையாக மனதளவில் சந்தோசமாக இல்லை.

மேலும், எனது காதலுக்கு உதவி செய்து திருமணம் வரை பெற்றோரும் பேசி என் காதலனின் வீட்டில் எனது கல்யாணம் நிச்சயம் செய்து வைத்து கொண்டு வந்து விட்ட என் அண்ணனின் காதல் இப்போது சுக்கு நூறானதே. என் திருமண திகதிக்கு 2 மாதங்களுக்கு பின் அண்ணனின் திருமணம் என்று நானும் என் அண்ணனும் பேசி கொண்டோம். இப்போது என் திருமணத்திற்கு 4 மாதங்களே உள்ளன. அண்ணனிற்கு வரும் கல்யாண பேச்சு வார்த்தைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் இப்போதிற்கு இக்கல்யாண பேச்சு வேண்டாம் என்கிறான்.

ஆனால் திவ்யா, உன்னை கண்டதும் எனக்கு ரியா அக்காவை பார்ப்பதுபோல் உள்ளது. என் அண்ணனுக்கும் அவ்வாறே. அதனால் சில சமயம் உன்னை மெய் மறந்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு இருக்கிறேன். உனது சில செய்கைகள் அக்காவையே நினைவு காட்டுகிறது. மீண்டும் என் ஆதி அண்ணனின் ரியாவாக எனது அண்ணனிற்கு வாழ்வழிடி. நான் என் அம்மா அப்பாவிடமும் பேசி விட்டேன் திவ்யா. எனது அண்ணனை உன் ஏற்று கொள்வாயா?? உனக்கு விருப்பம் என்றால் உனது வீட்டிலும் வந்து பேசுகிறோம் "என்று கேட்க,
திவ்யா மகிழ்ச்சியில் உறைந்தாள்.
வெட்க ரேகைகள் முகத்தில் படர, தனது கைகளை கிள்ளி பார்த்து இது யாவும் கனவல்ல. நனவே என்று உறுதி செய்தாள் திவ்யா. ஆனால் இத் திருமணத்திற்கு ஆதி சம்மதிப்பானா???? என்று மனம் கேட்க, முகமோ வாடி போயிற்று.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now