💗 Episode 26 💗

1.9K 62 24
                                    


வேலை சம்பந்தமாக மும்பாய் போன ரவி, என்னதான் இருந்தாலும் குடும்ப உறவை முறிக்கவிட முடியாமல், தன்னை எவ்வாறு நினைத்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி திவ்யாவின் வீட்டுக்கு சென்றான் தாயின் வாக்கையும் முறித்தபடி.
திவ்யாவின் தாயின் கவனிப்பில் என்றும் போல அன்பு மழையால் நனைந்தான்.
"அத்தை, அம்மாவை பற்றி தெரியும்தானே. கோபமா இருக்காங்க. நிச்சயதார்த்தம் அன்றும் வர மறுத்துவிட்டார்கள். ஆனால் அடுத்த தடவை கல்யாணத்திற்கு அழைத்து வருகிறேன். Function எல்லாம் எப்படி இருந்தது? எப்போது கல்யாணம்?" என்று கேட்கும்போது திவ்யாவும் அதை செவிமடுத்தபடி வந்து கொண்டிருந்தாள்.
திவ்யாவை கண்டு ரவி எழவே,
" sorry திவு. என்னால அன்று வர முடியவில்லை. மன்னித்துவிடு " என்று கூறி,
Congratulations என்று சொல்வதற்கு கையை நீட்டி பின் சமாளித்தபடி கையை மடிக்க, திவ்யா அதனையும் கவனிக்காமல் இல்லை.
"Thank you" என்று சிறு புன்னகையுடன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

தன்னை ரவி காதலிப்பது அவளுக்கு தெரியாமல் இல்லையே. சிறு வயதிலே முடிவு கட்டினதால் அவர்கள் நெருக்கமடைவதையும் யாரும் தடுக்கவில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மும்பாய் வந்து, ஆதியின் மேல் காதலில் விழுந்தது ரவிக்கு அன்று தெரியவந்ததே அவனுடன் அன்று நடந்து கொண்டவிதத்தால். இவ்வளவு நடந்தும் காதலித்த பெண்ணிற்கு வாழ்த்துக்கூறி, தன் துக்கத்தை மறைத்தவிதம் திவ்யாவின் கண்களை ஒரு நிமிடம் கலங்க வைத்தது. ரவியின் மீது மரியாதையும் வந்து சேர்ந்தது. திரைப்படத்தில் இவ்வாறான தியாகத்தை கண்டிருக்கிறேன் ஆனால் இன்று நிஜ வாழ்க்கையில் ரவி... என்று மனம் கூறலாயிற்று.

"என்ன அத்தை, புதுப்பெண்ணை கவனிக்கிறதில்லையா?? இவ்வளவு மெலிந்து போயிருக்கா? கல்யாண அன்று அழகாக இருக்கவேண்டுமே. இல்லையெனில் உங்களை தான் எல்லாரும் குறை கூறுவார்கள்" என்று உண்மை அக்கறையுடன் கூறியது கதவருகில் இருந்த திவ்யாவுக்கு நன்றாகவே கேட்டது.
ஆதி கூட என்னை இவ்வளவு கவனித்து அக்கறைப்படவில்லையே என்று மனம் நொந்தாலும், ரவியின் பாசத்தில் சற்றே நனைந்து போனாள்.
திவ்யாவிற்கு ஏனோ ரவியிடன் எவ்வாறு பேசுவது என்றும், அன்று நடந்தமைக்கு மன்னிப்பாவது கேட்போம் என்று நடக்க முற்படும்போது ஏனோ அவளை தடுத்தது.
நகைச்சுவைகள் கூறி திவ்யாவின் பெற்றோரிடமும், நிலாவிடமும் கதைத்துவிட்டு, ரவி எல்லாரிடமும் விடைபெற்று செல்ல, திவ்யா அவன் போகும் திசையை பார்த்து கொண்டிருந்தாள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Onde histórias criam vida. Descubra agora