Shopping mall இற்குள் நுழைந்த ரியா தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சென்ற போது இளம் வயதான பெண் வந்து,
"ஹாய் ரியா, என்னை நினைவு இருக்கா?? நான் உன்னை பற்றி கேள்வி பட்டு என் இதயமே நின்றுவிட்டதுபோல் இருந்தது. உன்னை மீண்டும் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அதெல்லாம் சரி, ஆதி சுகமாக இருக்கிறாரா? இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி விட்டார்களா??" என்று கேட்கையில் ரியாவின் முகமோ அதிர்ச்சியில் உறைய, இதை கேட்ட வேலைக்கார பெண் மாலா
" ரியா, லேட்டாகுது. வாங்க போகலாம்" என்று கையை இழுத்து போக, அவளும் இழுப்பட்டு போனாள் அப் பெண்ணை பார்த்தபடி." தலை வலிக்குது. மாலா, ஏதும் குளிர்பானம் குடித்து விட்டு செல்லலாமா??" என்று கேட்க, அவளும் தலையசைக்க, ஓடர் செய்து இருக்கையில் அமர்ந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி பெண் சொன்னதையே நினைத்து கொண்டிருக்க, அன்று கண்ட அனிதாவை காண, என் மனதில் உள்ள சில சந்தேகங்களை தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி,
" 2minutes please " என்று மாலாவிடம் விடைபெற்று, மாலாவின் முன்னிலையிலின்றி அனிதா கை கழுவ குளியலறை செல்லும்போது, மெதுவாக எழுந்து casual ஆக போவது போல் போனாள் ரியா." ஹாய் அனிதா, உன் நட்பு எனக்கு நினைவில்லை. ஆனாலும் நீ அன்று சொன்னதுபோல் இன்று இன்னொரு பெண் வந்து அதேபோல் சொன்னாள். ஆதி யார்?? அவனை நான் எங்கே சந்தித்தேன். அவன் யார்??? எனக்கு ஒன்றும் நினைவுக்கு வருது இல்லை. நீயாவது சொல்லேன்" என்று கேட்க அனிதா அதிர்ச்சியின் உச்ச கட்டத்தில் மறுபடியும் செல்ல,
" நீ உண்மையாக சொல்ரியா? ஆதி யார் என்று தெரியாதா?? அவன் தான் உன்" என்று கூறும்போது கதவு தட்டப்பட்டது.
" ரியா, ரியா" என்று மாலா தட்ட,
" அவசரமாக போகனும். உன் தொலைபேசி இலக்கத்தை தா. நான் இன்று இரவு பேசுகிறேன்" என்று ரியா கூற,
உடனே கடதாசியில் எழுதி இலக்கத்தை கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றாள் ரியா.வீட்டுக்கு வந்து பெற்றோர் கேட்ட மாலா எல்லாவற்றையும் கூற, கொதித்து எழுந்தனர். இவளை இங்கே வைத்து இருந்தால் பழைய ஞாபகம் வராமல் போகாது. ஒவ்வொருவரும் கேட்க கேட்க இவள் அதை பற்றி தேடினால் நாங்கள் உயிருடன் இருந்து முடிந்து. இவள் உயிருடன் இருக்கும் இந்த செய்தியை ஆதிக்கு தெரிந்தால் அவனும் இவளை பின்னால் துரத்தி நினைவுக்கு வர வைப்பான். நாம் ரியாவை accident ஆக்கினதே waste ஆக போகும். ஆகவே,
இவளின் படிப்பு qualification இற்கு என் நண்பன் மதனின் கம்பனியில் accountant ஆக வேலை செய்யலாம். அங்கு பொறுப்பாக இருப்பவன் நண்பனுடன் மகன் சுரேஷ். ஒரே ஒரு பிள்ளை. நிறைய சொத்துகள் இருக்கு. அங்கே அவள் செய்யும்போது ஒரு வேளை காதல் கீதல் வந்தாலும் நமக்கு வாசியே. அடுத்த மாதம் மாதிரி ரியாவை சென்னையில் இருந்து மும்பாய் அனுப்பி நிம்மதியாக இருக்கலாம். அடிக்கடி நாமும் போய் பார்த்து கொள்ளலாமே. அவளுடன் மாலாவையும் அனுப்பி வைப்போம்.
எங்களது மும்பாய் வீட்டில் தங்க வைத்தால் சரி. என்று இருவரும் உரையாடி விட்டு மகளின் அறைக்கு சென்றனர்.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...