ரவி கடைக்கு போகும் முதல் நாள் அன்று. திவ்யா அவனின் நடவடிக்கைகளை ஆராய்ந்தாள். எந்த நேரத்திற்கு எப்படி போவார்? சாப்பிட்டு விட்டா? எந்த நேரம் வீட்டுக்கு வருவார்? என்று தன் மூளையில் பதிவு செய்தாள்.
அத்தையுடன் சமைக்கும்போது ரவியின் விருப்ப வெறுப்புகளையும் தெரிந்து கொண்டாள். ரவியுடன் நல்ல நண்பனாக எல்லாவற்றையும் கூறி சகஜமாக பழக ஆரம்பித்தாள் முன்பு பழகிய அத்தான் முறையையும் தாண்டி.
காலப்போக்கில் திவ்யாவின் மனதில் ரவியின் மீதான காதலும் வித்திட்டது.அன்றிரவு அறையில் ரவியும் திவ்யாவும் நுழைய, கரப்பான் பூச்சியை கண்டு பயந்து அருகில் இருந்த ரவியை கட்டிப்பிடித்தாள் திவ்யா. அப்போதுதான் முதன்முதலாக தன்னவளின் இதய துடிப்பின் வேகத்தை கேட்டான் ரவி. அந்த அருகாமையானது ரவியை சுவர்க்கத்திற்கே கூட்டிச் சென்றது என்று சொன்னாலும் தப்பில்லை . சிறிது நேரம் கழித்து,
"சாரி ரவி, நான் அந்த கரப்பான் பூச்சிக்கு ரொம்ப பயம். அதனால் தான் இப்படி..." என்று தட்டுத்தடுமாறி பேச,
" it's okay திவ்யா. நீ இந்த பெரிய உடம்பை வைத்து கொண்டு அந்த சிறிய பூச்சிக்கு பயப்படுவதா??" என்று கிண்டலடிக்க,
" என்ன ரவி, இப்படி சொல்கிறீர்கள்? நான் கொழுத்துவிட்டேனா?? " என்று கண்ணாடிக்கு முன் இருந்து திரும்பி திரும்பி கண்ணாடியில் பார்த்து கேட்க,
" சும்மா, ஒரு ஜோர்க்கு சொன்னேன். நீ வேற?? " என்று தலையில் அடிக்க, அவளும் சிரிக்க, அவளின் புன்னகையில் தன்னை தொலைத்தான் ரவி.காலமும் விரைவாக ஓடியது.
ஆதியும் ஆபிஸ் போய் தனது கடமையை செய்தான்.ஆனால் வாய்த்தவறி திவ்யாவின் பெயர் அன்று சொல்லப்படவே, திவ்யாவை பற்றி யோசிக்கலானான். கல்யாணத்திற்கு முன் நான் செய்த தகராறால் அவள் வாழ்க்கையே நொருங்கி போனதே. அவள் தந்தைக்கும் எப்படி சுகமோ தெரியவில்லை. என் திருமணத்திற்கு பின்னும் அவள் வீட்டில் யாரையும் காணவுமில்லை. நானும் அவதானிக்கவுமில்லையே. நான் அவளுக்கு செய்த அநியாயத்துக்கு எப்படி பரிச்சயம் தேடுவேன்?? என்று புலம்பியபடி,
மதியை கபினுக்கு அழைத்து,
" மதி, திவ்யா எப்படி இருக்கிறாள்? இனி வேலைக்கு வருவாளா??" என்று கேட்க மதிக்கு கோபம் தலைக்கேறியது.
அன்று மருதாணியை மதி திவ்யாவிற்கு இட்டபோது தன் கதையை கூறி அவள் அழுததை தன்னால் மறக்கத்தான் முடியுமா?? அவளுக்கு ஆசைகளை வளர்த்துவிட்டு இப்போது ஒன்றுமில்லாதது போல் நடிக்கிறார்
" மதி, உன்னிடம் தான் கேட்கிறேன்" என்று மறுபடியும் சத்தமாக கேட்க,
"அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இப்போது அவள் தன் கணவருடன் சந்தோசமாக இருக்கிறாள்" என,
" அவளின் கணவன் யார்?? பெயர் என்ன? " என்று கேட்க,
" அவளின் மைத்துனன் ரவி" என்று கூறி, தனக்கு வேலை இருக்கிறது என்று ஆதியுடன் திவ்யா பற்றி பேச விருப்பமில்லாமல் கழன்றுபோனாள் மதி.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...