ஆதியின் அறிமுகம் 💕

3.6K 102 8
                                    


இன்னும் அரைமணி நேரத்துல சிறிய மீட்டிங் ஆகவே, 5நிமிட ப்ரேக் எடுக்குமாறு காரியாலயம் முழுக்க கேட்குமாறு மைக்கில் ஒலிபரப்பானது. உடனே,
திவ்யாவும் மதியும் சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்து நெஸ்கஃபே கப்பை எடுத்து கொண்டு இருக்கையை வந்து கொண்டு இருந்தனர்.

"பாரேடி, புதிய பாஸ் புதிய ப்ரேக் எல்லாம் தர்ராரு. நல்ல ஆள் போல" என்று மதி கூற,
"ஆமால்ல, நேத்து தான் சக்தி ஐயா சொன்னாரு. அதுக்குள்ள நா இந்த விஷயத்த மறந்துட்டேன் பாரேன். எனக்கு எழும்பினதுல இருந்து தலையில் ராகவி பற்றியே சிந்தனை போகுதுடி. அவள் உன்னோட பேசினாளா??? மெசேஜ் சரி பண்ணாளா?? அது சரி. புதிய பாஸ்ஸை கண்டாயா?" என்று திவ்யா கேட்க,
"இல்லடி. ராகவிட சத்தமே இல்ல. இன்னைக்கு வீட்டுக்கு போய் தான் கால் பண்ணி பார்க்கனும். ஆம் டி பாஸ்ஸ பார்த்தேன். பார்க்க நல்ல ஹான்சம்ம தான் இருக்கிறார். ஸ்டாப்ல உள்ள கேள்ஸ் எல்லாம் அவருக்காக போட்டி கூட போட்றாங்க. அவருக்கு தனக்கு தான் வேணும்னு. கடைசில மண் கவ்வ போறதுன்னா சுவர். பாரேன்" என்று மதி கூற, திவ்யாவிற்கும் அவனை பார்க்க ஆவலும் நேரிட்டது.

இருக்கையின் அருகே வந்த திவ்யா அமர முற்படும்போது, அவசரமாக யாரோ அவளை தாண்டி செல்லும்போது அவளை இடித்து கொண்டு செல்ல, அவள் கொண்டு வந்த நெஸ்கஃபே கப்பில் உள்ள நெஸ்கஃபே அவளது சுடிதாரில் கொட்டியது. கோபத்தில் திரும்பி பார்த்தாள் திவ்யா.
அவளை இடித்த ஜூவன் மொபைலில் " ஐ கன் ஹன்ல்,ஐ கன் கயர் ஒவ்ஃ இட். இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. யூ டோன்ட் நீட்டு வொரி எபோவ் இட்" என்று பேசியபடி இவளை திரும்பி பார்த்து, நடந்தவைகளை அறிந்தும் ஒரு sorry கூட கேட்காமல் போக, திவ்யாவிற்கு கோபம் தலைக்கேறியது. காலையில் நான் இவனிடம் கேட்டது சரி தான். இவனின் கண்கள் பிடரியில் தான் இருக்கு போல. இன்று இவனுக்கு நல்ல பாடம் சொல்லி கொடுக்கிறேன் என்று அவனின் பின்னால் துரத்தியபடி, அவன் போவதை ஒரு கட்டத்தில் நிறுத்தினாள் திவ்யா.

"எங்கடி, போகிறாய்??" என்று மதி அழைப்பதும் காதில் கேட்காமல் அவள் இஷ்டப்படி போய் கொண்டு இருந்தாள்.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Dove le storie prendono vita. Scoprilo ora