💗Episode 9💗

3.3K 82 11
                                    


அடுத்த நாள்,
ராகவி சிவாவின் வீட்டினருக்கு தன்னை பிடித்து விட்டது என்றும் அடுத்த வருடத்தில் முதல் மாதம் கல்யாணம் என்ற
நல்ல செய்தியுடன் கம்பனிக்கு வந்தாள். கூடவே அனைவருக்கும் ஸ்வீட் கொண்டு வந்தாள், இரு தோழிகளுக்கும் especial treat உடனும்.

ஆதியின் கபினுக்கு சென்ற ராகவி, ஸ்வீட் கொண்டு செல்ல, என்ன விஷேசம் என்று அவன் கேட்க, marriage fixed ஆகிட்டு, congratulations என்று கூறி, keep it on the table என்று கூற அதனை வைத்து விட்டு சென்றுவிட்டாள்.

இடைவெளி நேரத்தில்,
"என்னடி, ஆதி பாஸ், சுடு மூஞ்சாவே இருக்கிறார், என் முகத்தை கூட பார்க்காமல் ஏனோ தானோ என்று பேசிவிட்டு, கை நீட்டி கொடுத்த ஸ்வீடை கூட எடுக்கவில்லை. மேசையில் வைக்க சொன்னார். பெரிய உத்தம புருஷன் என்று அவருக்கு நினைப்பு போல" என்று ராகவி திட்டி கொண்டிருக்க,
திவ்யாவிற்கு இதனை கேட்க முடியாமல் போனது.

" stop it. " என்று கூற இரு நண்பிகளும் முகத்தை மாறி மாறி பார்த்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு பின்,
இடைவேளையின் போது, ஏதோ பேச்சில்,
" என்னடி, அவரை பற்றி பேசினாலே நீ எங்களுடன் எடுத்து எறிந்து பேசுகிறாய்??? நானும் கொஞ்ச நாளாக பார்த்து கொண்டு இருக்கிறோம். Are you Fell love with him??" என்று தற்செயலாக கேட்க, திவ்யாவின் முகங்கள் வெட்கத்தால் குங்குமமாய் சிவந்தது.

"டி, serious ஆ????" என்று ராகவி கேட்க,
" அப்படி ஒன்றும் இல்லை டி. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வளவு தான். அவருக்கு யாரும் ஏசினால் கொஞ்சம் கோபம் வரும். " என்று நாணத்துடன் அருகில் அழகாக வளர்ந்து பூமரத்தில் உள்ள பூக்களை பறித்து பறித்து வீசினாள் திவ்யா.

"ரொம்ப பிடிக்கும் மட்டும் தானா??? அல்லது அவருடன் வாழ ஆசையும் உண்டோ? உனக்கு வேறு எவர் மீதும் இப்படி பீல் ஆகி இருக்கா?? இவரை தவிர்த்து வேறொருவருடன் உன்னால் வாழ முடியுமா?? "என்று நண்பிகள் இருவரும் மாறி மாறி வினாக்களை தொடுக்க,
"ஐய்யோ, விடுங்கடி என்னை" என்று நழுவ போக விடாமல்,
" சொல்லுடி. உண்மையை. எல்லாம் தேவைக்காக கேட்கிறோம்" என்று கூற,
" ம்ம்ம். ஆசை தான்டி அவருடன் வாழ. இதுவரை குடும்பம் என்று பழகிய அத்தான் மேல் கூட இப்படி பீல் வரவில்லை. ஆனால் இவர் கூடவே நேரம் செலவிடனும் என்று தோனுகிறது. என்னால் இவரை மறந்து வாழவும் முடியாது. வேறு யாரையும் மணக்கவும் முடியாது" என்று உறுதியாக கூற,
இரு நண்பிகளும் 5 5 போட்டனர். திவ்யாவிற்கு எதுவும் புரியாமல் திரு திரு என முழிக்க,

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now